How To Store Garlic For Long Time in Tamil
பொதுவாக பூண்டு என்பது அனைவரின் சமையலறையிலும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒன்று. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. முக்கியமாக சொல்ல போனால் வீட்டில் எந்த வகையான குழம்பு வைத்தாலும் பூண்டு மிளகு ரசம் வைக்க மறக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு பூண்டு சமையலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது வாங்கி வந்த சில நாட்களிலேயே சொத்தை விழுந்து பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் மீண்டும் பூண்டை வாங்கி வர வேண்டும். எனவே பூண்டை நீண்ட நாட்களுக்கு அதாவது ஆறு மாதம் வரை வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips To Store Garlic For Long Time in Tamil:
டிப்ஸ் -1
பூண்டு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்க சொத்தை இல்லாத பூண்டாக பார்த்து வாங்க வேண்டும். அதாவது நல்ல எடையுள்ள பூண்டை பார்த்து வாங்க வேண்டும்.
டிப்ஸ் -2
பூண்டை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். அதாவது பூண்டினை ஒரு டப்பாவிலோ அல்லது ஒரு துணி பையிலோ சேர்த்து தண்ணீர் படாத உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
டிப்ஸ் -3
பூண்டை நன்கு காற்று சுழற்சி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அறை வெப்பநிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அதாவது, அறுபது முதல் அறுபத்தைந்து டிகிரி பாரன்ஹீட் வரை உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
டிப்ஸ் -3
பூண்டை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெற்றால் அதிக குளிர்பதம் உள்ள இடத்தில் பூண்டை வைப்பதால் விரைவில் முளைக்க தொடங்கி விடும்.
இஞ்சி மாத கணக்கில் காய்ந்து போகாமல் இருக்க மண் அல்லது டிஸ்சு பேப்பர் போதும்..
உரித்த பூண்டை எப்படி சேமிப்பது.?
உரித்த பூண்டை நீங்கள் குளிர்ச்சான பெட்டியில் தான் சேமிக்க வேண்டும். அதாவது, உரித்த பூண்டினை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். இதனை நீங்கள் 1 வாரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இருந்தாலும், உரித்த பூண்டை குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்துவதால் நம் உடலிற்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. எனவே முடிந்த வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிப்பதை தவிர்த்து விடுங்கள்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |