உங்கள் வீட்டு டாய்லெட் எவ்வளவு கறை இருந்தாலும் 10 நிமிடத்தில் பளிச்சினு சுத்தம் ஆயிடும்

Advertisement

உங்கள் வீட்டு டாய்லெட் எவ்வளவு கறை இருந்தாலும் 10 நிமிடத்தில் பளிச்சினு சுத்தம் ஆயிடும் – Toilet Basin Cleaning Tips in Tamil

பொதுவாக பெருமபலனவர்களுக்கு கிளிங் செய்வது என்பது மிகவும் பிடிக்காத வேலை ஆகும். காரணம் அதற்கு அதிகம் நேரம் செல்வாக்கும், உடல் சோர்ந்து போகும் இந்த இரண்டு காரணங்களினாலே பெரும்பாலான நபர்கள் சுத்தம் செய்யும் வேலைகளை விரும்புவதில்லை, இருப்பினும் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக தான் வைத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் ஆரோக்கியமாக வாழமுடியும்.

கிளீனிங் செய்யும் வேலைகளில் மிகவும் கடினமான வேலை எதுவென்றால் அது பாத்ரூம் மற்றும் டாய்லெட் சுத்தம் செய்யும் வேலை தான். அதிலும் உப்பு தண்ணீர் பயன்படுத்துபவர்களால இருந்தால் கண்டிப்பாக அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இனி அந்த வேலையை நீங்கள் கண்டினமாக நினைக்க வேண்டாம், ஏன் என்றால் இங்கு உப்பு கறை படிந்த பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை மிக எளிதாக நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்துவிடலாம். அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. டிஸ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் – ஓன்று
  2. ஹார்பிக் – தேவையான அளவு
  3. கல் உப்பு – ஒரு கைப்பிடியளவு
  4. பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எலுமிச்சைப்பழம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க இந்த டிப்ஸ மட்டும் Follow பண்ணுங்க..!

சுத்தம் செய்யும் முறை:

Toilet Basin Cleaning

டாய்லெட் உள்ளே டிஸ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பர் ஏதாவது ஒன்றை போடுங்கள்.

பிறகு ஒரு கைப்பிடியளவு கல் உப்பு, இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா இவை இரண்டுயும் டாயிலெட் பேஷனில் தூவிவிட வேண்டும்.

பிறகு ஹார்பிகை எப்பொழுதும் பரவலாக ஊற்றிவிடுவது போல் ஊற்றிவிட்டு, 10 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.

பிறகு டாயிலெட் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஸ் அல்லது தொடப்பக்கட்டையை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவினால் போதும் உங்கள் பாத்ரூம் மற்றும் டாய்லெட் இரண்டிலும் இருந்த உப்பு கறை அனைத்தும் மறைந்து புதுசு போல் பளிச்சென்று ஜொலிக்கும்.

கண்டிப்பாக இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும், பிறகு டாய்லெட் சுத்தம் செய்ய இந்த ஒரு டிப்ஸை மட்டும் தான் ட்ரை செய்வீங்க, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த டிப்ஸை செய்யுங்கள் என்று சொல்வீர்கள் அந்த அளவிற்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மீன் முள் தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement