உங்க வீட்டு டாய்லெட்டை பளிச்சென்று மாற்றுவதற்கு எலுமிச்சை பழத்தோல் மட்டும் போதும்..!

Toilet Clean Lemon Liquid 

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய நிலையில் அனைத்து பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். மேலும் பெண்கள் பணிபுரியாத இடங்களே கிடையாது. அதுபோல சில பெண்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்கிறார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் வேலைகளை விட வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வேலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

அதாவது பாத்திரம் கழுவுவது, சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை தான் கூறுகின்றோம். சரி இன்றைய பதிவு இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். உங்கள் வீட்டு டாய்லெட்டை பளிச்சென்று மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Toilet Clean Lemon Liquid At Home in Tamil:

  1. எலுமிச்சை பழத்தின் தோல்
  2. சோப்பு தூள் (Washing Powder)
  3. உப்பு
  4. பேக்கிங் சோடா
  5. வினிகர்
  6. தண்ணீர்
அழுக்கு படிந்த வெள்ளை ஷூவை ஐந்தே நிமிடத்தில் புதுசு போல மாற்ற இப்படி செய்யுங்கள் 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். பின் அதில் 5 எலுமிச்சை பழத்தில் தோலை மட்டும் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

நன்றாக அரைத்த பின் அதை ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் ஊற்றவும்: 

பாத்திரத்தில் ஊற்றவும்

பின் பாத்திரத்தில் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி கொள்ளவும். அதில் ஏதாவது ஒரு சோப்பு தூள் 4 ஸ்பூன், பேக்கிங் சோடா 3 ஸ்பூன் மற்றும் உப்பு 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் 1 கப் அளவிற்கு வினிகர் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இப்பொழுது லிக்விடு தயாராகிவிட்டது. இந்த லிக்விடை உங்கள் வீட்டு டாய்லெட்டில் ஊற்றி கழுவினால் டாய்லெட் பளிச்சென்று மாறிவிடும்.

உங்கள் வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க 

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil