10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற இதை மட்டும் 10 நிமிடம் செய்தால் போதும்.

Advertisement

பாத்ரூம் பளபளப்பாக மாற 

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வீட்டை சுத்தம் செய்வதும் பெரிய வேலை தான் என்றாலும் கூட, இந்த பாத்ரூமை சுத்தம் செய்வது அதை விட மிகப்பெரிய வேலை என்றே சொல்லலாம். இந்த பாத்ரூமை பொருத்த வரையில் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் கூட அதில் இருக்கும் கறைகள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி விடாது. அதிலும் வீட்டில் உள்ள இரண்டு நபரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பாத்ரூம் கட்டிய புதிதில் நல்லா பளிச்சென்று இருக்கும், நாளடைவில் பழையதாக இருக்கும். உங்க வீட்டில உள்ள பாத்ரூம் எந்த நிலையில் இருந்தாலும் அதனை பளிச்சென்று மாற்றுவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற்ற:

பேஸ்ட்:

10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற்ற

நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை எடுத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். அதன் பிறகு பாட்டில் மூடியில் சிறியதாக ஓட்டை போட்டு கொள்ளவும். இதனை பாத்ரூம் முழுவதும் ஸ்ப்ரே செய்து 1/2 மணி நேரம் அப்படியே விடவும்.

1/2 மணி நேரம் கழித்து பாத்ரூமை வார்கோல் பயன்படுத்தி தேய்த்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். இதனை நீங்கள் தினமும் செய்து வர வேண்டும். இல்லை என்னால் தினமும் செய்ய முடியவில்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது செய்ய வேண்டும். அப்போது தான் பாத்ரூம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்.

பேக்கிங் சோடா:

10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற்ற

முதலில் 3 கப் சூடான தண்ணீருடன் சமையல் சோடா, துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த லீகுய்டு ஆறிய பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள லீகுய்டு பாத்ரூமில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து பாத்ரூமை வார்கோல் பயன்படுத்தி தேய்த்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு நாள் செய்தால் பாத்ரூம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement