Toilet Cleaning Tips in Tamil
வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பாத்ரூமை பார்த்தாலே தெரிந்து விடும். பாத்ரூம் தரை மற்றும் பாத்ரூம் பேஷனில் அழுக்கு படிந்திருக்கும். அதனை என்ன தான் பிரஷை பயன்படுத்தி தேய்த்தாலும் கறைகள் மறையாது. மேலும் அந்த நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி மற்றும் நிறைய பூச்சிகள் வரும். இந்த மூன்று பிரச்சனைகளையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கிளீன் செய்து வாசமாக வைத்திருக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Western Toilet Cleaning Tips in Tamil:
வெஸ்டர்ன் டாய்லட்டில் கறை படியாமல் இருப்பதற்கும், நாற்றம் வராமல் இருப்பதற்கும் வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு மேல் ஒரு பாக்ஸ் இருக்கும் அல்லவா.! அந்த பாக்சில் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை சிறிதளவு போடவும். வாரத்திற்கு ஒரு முறை பாக்சில் பேஸ்ட்டை போடவும். இது போல செய்வதினால் தண்ணீர் பிரஸ் பண்ணும் போது பேஸ்ட் கலப்பதால் அழுக்கும் படியாது அதுபோல வாசமாகவும் இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
பூச்சிகள் வராமல் இருக்க:
ரச கற்பூரத்தை நுனிக்கி, தண்ணீரில் கரைத்து பாத்ரூம் சிங்க் ஓட்டையின் மேலே ஊற்றி விடுங்கள். இந்த கற்பூர வாசனைக்கு எந்த பூச்சிகளும் வராது.
கறையை நீக்க:
ஒரு கப்பில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாத்ரூம் பேஷன் மற்றும் எங்கெல்லாம் அழுக்கு இருக்கிறதோ அங்கு தெளித்து 10 நிமிடம் வரைக்கும் ஊற வைக்கவும். பிறகு பிரஷை பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |