வெறும் 5 நிமிடத்தில் டாய்லெட் பளிச்சென்றும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்க வேண்டுமா..?

Advertisement

Toilet Cleaner Tips

பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தினமும் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும். இத்தகைய வேலைகள் அனைத்தினையும் முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். அதிலும் சில பெண்கள் வீட்டு வேலையினையும் முடித்து விட்டு வெளியில் வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டில் எது கஷ்டமான வேலை என்றால் வெளியில் சென்று அலுவலகத்தில் பார்க்கும் வேலை என்று தான் கூறுவார்கள். இவ்வாறு நாம் நினைத்து கொண்டிருப்பது மிகவும் தவறு. ஏனென்றால் வீட்டில் உள்ள பாத்ரூம், கிச்சன், டாய்லெட் இதுபோன்றவற்றை சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் அனைவருடைய வீட்டிலும் சுத்தும் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும் டாய்லெட்டினை மிகவும் எளிய முறையில் சுத்தும் செய்து பளிச்சென்றும், துறுநாற்றம் இல்லாமலும் வைப்பதற்கான டிப்ஸினை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். ஆகவே பதிவை படித்து அந்த டிப்ஸினை தெரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

டாய்லெட் சுத்தம் செய்வது எப்படி.?

அனைவருட வீட்டிலும் இருக்கும் டாய்லெட்டினை சுத்தம் செய்வதற்கு இரண்டு விதமான டிப்ஸினை ஒன்றன் கீழ் ஒன்றாக படித்து பார்க்கப்போகிறோம்.

டிப்ஸ்- 1

 டாய்லெட் சுத்தம் செய்வது எப்படி

முதலில் நீங்கள் 2 ஸ்பூன் அளவிற்கு வெள்ளை வினிகரை எடுத்துக்கொள்ள வேண்டும். வினிகர் டாய்லெட்டை விரைவில் சுத்தம் செய்வதற்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதனால் 2 ஸ்பூன் வெள்ளை வினிகரை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் டாய்லெட்டில் தெளித்து விட்டு அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள்.

மறுநாள் காலையில் ஊற்றிய வெள்ளை வினிகரை நார்மல் டாய்லெட்டாக இருந்தால் பிரஷினால் தேய்க்க வேண்டும். அப்படி இல்லை வெஸ்டன் டாய்லெட் என்றால் ஒரு முறை ஃப்ளஷ் செய்தால் போதும் கறைகள் அனைத்தும் நீங்கி டாய்லெட் பளிச்சென்று மாறி விடும்.

ஒரு பொருளை மட்டும் வைத்து நார்மல் டாய்லெட் மற்றும் வெஸ்டன் டாய்லெட் இந்த இரண்டையும் எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.

30 வருட டைல்ஸ் கரையை 3 ரூபாயில் கிளீன் செய்யாலாம் 

டிப்ஸ்- 2

toilet cleaning tips in tamil

நம்முடைய வீட்டில் இருக்கும் டாய்லெட் ஆனது சில நேரத்தில் பாசி பிடித்த வழுவழுப்பான தன்மையுடன் இருக்கும். அதன் பின்பு அதில் இருந்து துறுநாற்றமும் வீச ஆரம்பிக்கும்.

அதனால் உங்களுடைய வீட்டில் கோலம் போடுவதற்கு பயன்படுத்தும் கோலமாவில் 3 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் தெளித்து விட்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

15 நிமிடம் கழித்து நன்றாக பிரஷினால் தேய்த்து சுத்தும் செய்தால் போதும் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் இருந்து விடாப்பிடியான கறை மற்றும் பாசி எல்லாம் நீங்கி நறுமணத்துடன் இருக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு டிப்ஸிகளை செய்வதற்கு கடையில் பொருட்கள் எதுவும் வாங்காமல் வீட்டில் உள்ளவற்றை வைத்து டாய்லெட்டை சுத்தம் செய்து விடலாம்.

எத்தனை வருடமானாலும் டைல்ஸ் தரை பளிச்சென்று இருக்க இதை செய்திடுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement