எத்தனை வருட பாத்ரூமையும் புதிது போல பளபளப்பாக்க எலுமிச்சை மற்றும் கல் உப்பு மட்டும் போதும்..

Advertisement

பாத்ரூம் புதிது போல பளபளப்பாக மாற 

இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டை அவர்களால் சரியாக பராமரிக்க முடிவதில்லை. வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் போது தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். ஒருவர் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் கிட்சனை பார்த்தாலே தெரியும். பாத்ரூமை கிளீன் செய்யாமல் இருந்தாலும் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பாத்ரூம் வாசனைக்காக மாட்டுவார்கள். இவை நிரந்தரமானதாக இருக்காது. ஏனென்றால் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் அதனின் வாசனை இருக்கும். பாத்ரூம் கிளீன் ஆக இருந்தால் தான் நமது உடல் எந்த நோய் நொடியும் வராமல் இருக்கும். அதனால் தான் இந்த பதவில் பாத்ரூமை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா:

பாத்ரூம் புதிது போல பளபளப்பாக மாற 

பாத்ரூமில் கறைகளை நீக்கி புதியதக மாற்ற வினிகர் மற்றும் பேக்கிங் சோடா உதவுகிறது.

இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பேஸ்ட் ஆக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை பாத்ரூம் முழுவதும் பிரஷை பயன்படுத்தி அப்பளை செய்யவும். இதனை அப்படியே ஒரு நாள்  முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் பிரஸ் அல்லது வார்கோல் பயன்படுத்தி தேய்த்து கழுவினால் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.

பல வருடமாக உங்க பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ளதா.! அதை நீக்க இதை மட்டும் செய்யுங்க

எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு:

பாத்ரூம் புதிது போல பளபளப்பாக மாற 

ஒரு கப்பில் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா 3 தேக்கரண்டி, கல் உப்பு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் சேர்த்து கொள்ளவும். இதனை பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும்.

தெளித்து  விட்ட பிறகு 15 நிமிடம் கழித்து பாத்ரூமை பிரஷை பயன்படுத்தி தேய்த்தால் கறைகள் எல்லாம் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒரு குறிப்பை பயன்படுத்தி வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தாலே பாத்ரூம் பளிச்சென்று இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement