Toilet Cleaning Tips in Tamil
வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி வாரத்தில் ஒரு முறை அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு சுத்தம் செய்யும் வேலை இருக்கும். அதிலும் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் டாய்லெட் சுத்தம் செய்யும் வேலை தான் மிகவும் கடினமாக இருக்கும். காரணம் அவற்றில் இருக்கும் விடாப்பிடியான மஞ்சள் கறை மற்றும் உப்பு கறை இவை இரண்டினால் தான். இந்த கறையை அகற்றுவதற்குள் நமது உடலில் பாதி எனர்ஜி போய்விடும். ஆனால் பாத்ரூமில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை பிரஸ் பயன்படுத்தாமல் மிக எளிதாக சுத்தம் செய்ய முடியும். அது எப்படி முடியும் என்று யோசிக்கிறீங்களா..?, கண்டிப்பாக முடியும்.. சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- துணி துவைக்கும் சோப்பு – ஒன்று
- பேக்கிங் சோடா – 4 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 5
- கல் உப்பு – ஒரு கைப்பிடியளவு
- சூடான நீர் – ஒரு லிட்டர்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
செய்முறை:
முதலில் துணி சோப்பை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை நன்றாக நுனிக்கு பவுடர் போல் செய்துகொள்ளுங்கள்.
பிறகு ஐந்து எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் நுனிக்கு வைத்த துணி சோப்பை சேர்க்கவும், பின் அதனுடன் பிழிந்து வைத்த எலுபிச்சை பழம் சாறு, நான்கு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு கையளவு கல் உப்பு மற்றும் ஒரு லிட்டர் சூடான நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
மிக்ஸ் செய்வதற்கு குச்சியை பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் கலவைகள் அனைத்தும் கரைந்த பிறகு, இந்த நீரை 1/2 கப் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு இதனை டாய்லெட்டில் இரவு உறங்குவதற்கு முன் ஊற்றிவிடவேண்டும்.
பிறகு மறுநாள் காலை அந்த டாய்லெட்டை பார்த்தால் அவற்றில் இருக்கும் கறைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
கண்டிப்பாக இந்த டிப்ஸை ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |