பல வருடமாக உங்க பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ளதா.! அதை நீக்க இதை மட்டும் செய்யுங்க

Advertisement

பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறையை நீக்க

பொதுவாக பாத்ரூம் சுத்தம் செய்வது என்பது கஸ்டமான வேலையாக இருக்கிறது. கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் வீட்டை சரியாக பராமரிக்க முடிவதில்லை. வீட்டில் லீவ் கிடைக்கும் போது தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். வீட்டை சுத்தம் செய்யாவிட்டாலும் பிரச்சனையில்லை,. ஆனால் இந்த பாத்ரூமை சுத்தம்செய்யவிட்டால் வீடே நாறிவிடும். அதிலும் பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்திருக்கும் இதனை சுத்தம் செய்வது என்பது ஈஸியான வேலை இல்லை.  அதனால் இந்த பதிவில் பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறையை எப்படி கிளீன் செய்வது என்று பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறையை நீக்க டிப்ஸ் :1

தேவையான பொருட்கள்:

வினிகர் – 1/2 கப்

சூடு தண்ணீர் – 1/2 கப்

பேக்கிங் சோடா – 3 தேக்கரண்டி

துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர்- சிறிதளவு

செய்முறை:

பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறையை நீக்க

மேல் கூறிய பொருட்களை ஒரு கப்பில் சேர்த்து எல்லாம் மிக்ஸ் ஆவது போல் கலந்து கொள்ளவும். முக்கியமாக கையை பயன்படுத்தாமல் ஒரு குச்சி அல்லது கரண்டி வைத்து கலந்து கொள்ளவும். இதை தண்ணீயாக இல்லாமல் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை மஞ்சள் கறை படிந்துள்ள இடத்தில் பிரஷை பயன்படுத்தி அப்பளை செய்ய வேண்டும். இதனை அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே விடவும்.

ஒரு மணி நேரம் கழித்து பிரஷை பயன்படுத்தி பாத்ரூமை தேய்த்தாலே மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கி விடும்.

பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறையை நீக்க டிப்ஸ் :1

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா – 1/2 கப்

வினிகர்- 1 கப்

செய்முறை:

ஒரு கப்பில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும். ரொம்ப தண்ணீயாக கலக்காமல் பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ள இடத்தில் அப்பளை செய்து இரவு முழுவதும் அப்படியே விடவும்.

மறுநாள் காலையில் பிரஷை பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் விட்டு கழுவினால் பாத்ரூம் பளிச்சென்று இருக்கும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

Advertisement