TV Screen Cleaning Tips in Tamil
வணக்கம் நண்பர்களே.. பொதுவாக வாரத்தில் ஒரு முறையாவது நமது வீட்டை மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். குறிப்பாக டீவியின் ஸ்க்ரீனில் தூசிகள் படிந்திருக்கும் ஆகவே அதனை துடைக்கும் போது நாம் கண்டிப்பாக செய்யவே கூடாத 5 தவறுகளை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க டீவி துடைக்கும் போது செய்யவே கூடாத எட்டு தவறுகளை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.
தப்பித்தவறி TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 5 தவறுகள்!
No: 1
பொதுவாக நமது டீவி ஸ்க்ரீன் (LCD, LED, OLED ஸ்க்ரீன்களால்) ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும், அதாவது அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும் மற்றும் அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே டீவி துடைக்கும்போது முடிந்த வரை, அது LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்ப்ளேவாக இருந்தாலும் சரி அதை கிளீன் செய்ய மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தலாம்.
No: 2
டீவி ஸ்க்ரீனை அழுத்தி துடைக்க கூடாது, அப்படி மிகவும் கடினமாக அழுத்தினாள் அல்லது தேய்த்தால் அது சேதமடையலாம். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்த வரை மெதுவாக துடைப்பது மிகவும் சிறந்தது.
No: 3
LCD, LED மற்றும் பிளாஸ்மா திரைகளுக்கு திரவங்களை பயன்படுத்தினால் கடுமையான சேதம் உண்டாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த திரவத்தில் அம்மோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் போன்றவை காணப்படுகிறது. ஆகவே டீவி ஸ்க்ரீன், கம்ப்யூட்டர் ஸ்க்ரீன், மொபைல் ஸ்க்ரீன் போன்றவற்றிக்கு திரவங்களை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
No: 4
பொதுவாக பலர் TV-யை துடைக்க ஸ்ப்ரேயிங் முறையை பயன்படுத்துவார்கள். இருப்பினும் இப்படி நேரடியாக டீவியில் ஸ்ப்ரே செய்ய வேண்டாம். மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு டீவியை துடைக்கலாம். நேரடியாக திரவத்தை ஸ்ப்ரே செய்யும் போது அது டீவியின் கண்ணாடியில் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
No: 5
டீவியை On செய்துகொண்டே டீவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய கூடாது. ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. குறிப்பாக ஸ்க்ரீன் “கருப்பாக” இருக்கும் போது தான், அதில் உள்ள அழுக்குகளை மற்றும் கோடுகளை கண்டறிய முடியும்; அதை அகற்ற முடியும். மேலும் இருண்ட ஸ்க்ரீனில் தான் தூசிகளும் நன்றாக தெரியும்.
இந்த டிப்ஸையும் செய்து பாருங்கள் ⇒ பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |