மேல் நெற்றி, புருவங்கள் என்று பருக்கள் வருவதை வைத்து அது எதனால் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்..!

Advertisement

Types of Pimples on Face and Reasons in Tamil

என்னதான் முகத்தை பாதுகாத்து வந்தாலும் முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் வந்துகொண்டு தான் உள்ளது. அதனை தடுக்க நாம் தினமும் உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத ரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை  செய்து முகத்தை நாமே கெடுத்து கொள்கிறோம். நீங்கள் நினைப்பது புரிகிறது அப்புறம் எப்படி தான் முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவது.

அதனை போக்க இயற்கை வழிகள் உள்ளது. அதில் ஒன்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதற்கு முன் ஏன் முகத்தில் பருக்கள் வருகிறது. அதேபோல் அது வரும் இடத்தை வைத்து அது எதனால் வருகிறது என்று தெரிந்துகொள்ள முடியும். வாங்க அதனை பற்றியும் அதனை 1 வாரத்தில் எப்படி நீக்குவது என்பதை பற்றியும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மேல் நெற்றியில் பருக்கள் வர காரணம்:

பருக்கள் முதலில் முகத்தில் அடையும் தூசிகளாலும் வருகிறது. அதேபோல் முகத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பதாலும் வருகிறது ஏன்..? அதனை விட முக்கியமாக பருக்கள் எந்த இடத்தில் வருகிறது என்பதை வைத்து உடல் உறுப்புகள் எப்படி இருக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.  வாங்க தெரிந்து கொள்ளலாம்..!

நாம் சாப்பிடும் சாப்பாடு முழுமையாக செரிமானம் ஆகாமல் இருந்தால் மேல் நெற்றியில் பருக்கள் வரும். அது எப்படி என்று யோசிப்பீர்கள். உணவுகள் சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் உடலில் நச்சு கோளாறுகளின் அளவு அதிகரிக்கிறது. அதனால் மேல் நெற்றியில் பருக்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை குறைக்க அளவுக்கு அதிகமாக டீ காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு, க்ரீன் டீ குடிக்கலாம்.

👉  முகம் சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் ..!

புருவங்களுக்கு இடையில் பருக்கள் வந்தால்: 

புருவங்களுக்கு இடையிலோ அல்லது புருவங்களுக்கு மேல் பகுதியில் பருக்கள் வந்தால் போதுமான அளவு துக்கம் இல்லாமல் இருப்பதாலும் மனஅழுத்தம், சீரான இரத்த ஓட்டம் இல்லையென்றால் பருக்கள் புருவங்களுக்கு இடையில் வருகிறது. இதனை தடுக்க தினமும் 8 மணி நேரம் தூங்கவேண்டும். மேலும் மனதில் தேவையில்லாததை நினைக்காமல் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

கன்னத்தில் பருக்கள் வர காரணம்:

கன்னத்தில் பருக்கள் வருவதற்கான காரணம் கன்னங்களும் குடல்களுக்கும் தொடர்பு உள்ளது. அதேபோல் அதிகமாக புகைபிடிப்பது, நச்சு தன்மை உள்ள காற்றை சுவாசிப்பது தூங்கும் தலையணையில் தூசி இருந்தால் கன்னத்தில் பருக்கள் வரும். அதனால் வெளியில் போயிட்டு வந்தால் முகத்தை கழுவது நல்லது.

மூக்கில் பருக்கள் வர காரணம்:

மூக்கில் பருக்கள் வந்தால் இதயம் அல்லது இரத்த அழுத்ததில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடிக்கடி மூக்கில் பருக்கள் வந்தால் இரத்ததை செக் செய்து கொள்வது நல்லது.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement