முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா..!
வணக்கம் பொதுநலம் .காம் நேயர்களே..!இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது நமது ஆரோக்கியத்திரிக்கான ஒரு டிப்ஸ்தான். அதுவும் நாம் அனைவரின் வீட்டிலேயும் உள்ள முருங்கைக்கீரையை வைத்துதான் பார்க்கப்போகின்றோம். இந்த பதிவை முழுதாக படித்தால் முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! என்று நீங்களே ஆச்சிரியம்படுவீர்கள். இந்த பதிவை முழுதாக பயன்பெறுங்கள் சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
முருங்கைக்கீரையின் நன்மைகள்:
பொதுவாக நாம் அனைவரின் வீட்டிலையும் முருங்கைமரம் இருக்கும் நாம் அனைவரும் அதில் உள்ள முருங்கைக் கீரையை பறித்து சமைத்து சாப்பிடுவோம். ஏன்யென்றால் அதில் உள்ள ஐயன் சத்து நமது உடலுக்கு மிகவும் வலிமையை தரும் என்பதால் தான்.
டிப்ஸ் -1
இந்த முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..! நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை சரி வாங்க அது எப்படியென்று பார்ப்போம்.
முதலில் முருங்கைக்கீரையை பறித்து அதனை உறுவி ஒரு நான்கு நாட்கள் நிழலில் காயவைத்து அதனை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக்கி அதனை சலிச்சி ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும். பிறகு ஒரு உரலில் 2 சுக்கு துண்டு, 5 கிராம் பட்டை, 5 கிராம் மிளகுத்தூள் இவை மூன்றையும் ஒன்றும் இரண்டுமாக இடித்து அதற்கு பிறகு ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக்கி அதனை முருங்கைக்கீரை பொடியை சலிச்சி வைத்திருந்த பத்திரத்திலேயே சலித்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் 5 கிராம் மஞ்சள்தூளையும் கலந்து அந்த பொடியை ஒரு காற்றுப்புகாதா பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு டம்ளர் வென்னீரில் 1/2டீஸ்பூன் இந்த முருகைகீரை பொடி, 4 தூளி எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி தினமும் காலையில் வெறும்வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
ஒரு பாத்திரத்தில் இந்த முருகைக்கீரை பொடியை 2 டீஸ்பூன் சேர்த்து அதனுடன் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தோசைமாவில் இருந்து 2 கரண்டி சேர்த்து தோசையாகக்கூட சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதாலும் நமது உடல் எடை குறையும்
டிப்ஸ் -2
முதலில் கூறியதுபோல் முருங்கைக்கீரையை பறித்து அதனை உறுவி ஒரு நான்கு நாட்கள் நிழலில் காயவைத்து அதனை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக்கி அதனை சலிச்சி ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும். பிறகு இதனுடன் 5 கிராம் மிளகுத்தூள்,5 கிராம் சீரகத்தூள், 1 டீஸ்பூன் வேப்பிலை பொடி சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு டம்ளர் வென்னீரில் 1 டீஸ்பூன் இந்த முருகைகீரை பொடியை போட்டு நன்கு கலக்கி. இதனை தினமும் காலையில் வெறும்வயிற்றில் குடித்துவந்தால். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும்.
டிப்ஸ் -3
முதலில் முருங்கைக்கீரையை பறித்து அதனை உறுவி நன்கு தண்ணிர் ஊற்றி சுத்தம் செய்து அதனை ஒரு கடாயில் போட்டு அதனுடன் 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 1 டீஸ்பூன் சீரகத்தூள், சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவைத்து குடித்துவந்தால் நாள்பட்ட இருமல்,சளி கூட சரியாகிவிடும்.
பூண்டு உரிக்க இனி கஷ்டப்பட வேண்டாம் இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்கள்..!
இதுபோன்ற டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tips |