உடல் வலிமை பெற ஒரு வாரத்திற்கு இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க ..!

udal valu pera tips in tamil

உடல் வலிமை அதிகரிக்க டிப்ஸ்..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். அதுவும் நமது உடலை எப்பொழுதும் வலிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம். நம்மில் பலருக்கும் நமது உடலை எப்போதும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரிந்திருக்காது. அப்படி ஆசை உள்ளவர்களுக்குஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.  அதனால் இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உடல் வலிமை பெற டிப்ஸ்:

டிப்ஸ்- 1

முதலில் இந்த டிபிஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. பால் – 100 மி.லி 
  2. இலவங்க பட்டை – 2 சிறிய துண்டு 
  3. கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
  4. பாதாம் – 4  
  5. ஏலக்காய் – 2 

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்திருந்த 2 சிறிய துண்டு இலவங்க பட்டை, 2 டேபிள் ஸ்பூன் கசகசா, 4 பாதாம் மற்றும் 2 ஏலக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு காற்றுப் புகாத மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 மி.லி பாலை ஊற்றி அதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த பொடியிலிருந்து 2 டீஸ்பூன் போட்டு நன்கு கொதிக்கவிடவும். பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கி  சூடு ஆறியவுடன் அதனை குடியுங்கள். உங்களுக்கு தேவை என்றால் அதனுடன் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

மேலே கூறியுள்ள பொடியை பாலுடன் சேர்த்து ஒரு வாரத்திற்கு தினமும் இரவில் குடித்து வாருங்கள் உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெறுவதை நீங்களே காணலாம்.

டிப்ஸ்:2

முதலில் 1 கைப்பிடி அளவிற்கு நித்திய கல்யாணி இலையை எடுத்து அதனை நன்கு தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250 மி.லி தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த நித்திய கல்யாணி இலையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளவும். 

இந்த தேனீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெறுவதை நீங்களே காணலாம். 

இதையும் படியுங்கள் => எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..!

இதுபோன்று டிப்ஸ் பற்றி  தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil