Upi Transaction Tips in Tamil
தற்போது ஸ்மார்ட் போன் பணத்தை மிகவும் எளிமையாக அனுப்பும் வசதிகளை கொண்டுள்ளது. ஸ்மார்ட் போனில் இருக்கும் போன்பே, கூகுள்பே போன்ற யூபிஐ மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். இதனால் டீ கடைகளுக்கு சென்று ஒரு டீ குடிப்பதற்கு கூட இந்த UPI மூலம் தான் பணத்தை அனுப்பிக்கிறார்கள். சிலர் UPI பயன்படுத்தும் போது சில தவறுகள் செய்கிறார்கள். அதனால் சில பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகவே UPI மூலம் பணம் அனுப்பினால் இதுபோன்ற தவறுகள் செய்வதை தவிர்க்கவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
UPI Transaction Tips in Tamil:
உங்களுடைய கணக்கிலிருந்து மற்றொருவருக்கு பணத்தை அனுப்பும் போது உங்களுடைய UPI பின் உள்ளிடவேண்டும். ஆனால் வேறு ஒரு கணக்கிலிருந்து உங்கள் கணக்கிற்கு பணம் வந்தால் அதற்கு பின் உள்ளிடவேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் பணத்தை UPI மூலம் அனுப்பும் போது அவரின் பெயர் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து அதன் பின்பு தான் அனுப்பவேண்டும். சில நேரத்தில் மற்றொருவருக்கு பணத்தை அனுப்பி அதனை திரும்ப பெறுவதற்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது.
அதேபோல் நீங்கள் எந்த ஒரு ரகசிய எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் இந்த UPI Pass Word ரகசியமாக வைத்திருக்க வேண்டும். வேறு யாரிடமும் இதனை பகிரக்கூடாது.
UPI யில் உள்ள முக்கிய அம்சமாக உள்ள QR ஸ்கேனை பயன்படுத்தி மட்டுமே பணத்தை அனுப்புவது சிறந்தது. தெரித்தவர்களிடம் UPI -யை ஷேர் செய்வதை தவிர்க்கவும்.
தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் அதன் மூலம் கூட உங்களின் UPI விவரம் வேறு ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அதன் முழு விவரங்களை அறிந்து அது அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அதேபோல் UPI சம்பந்தட்ட தேவையில்லாத நம்பரின் மூலம் SMS வந்தால் அதனை கிளிக் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 G pay -யில் UPI Pin மறந்துவிட்டதா அப்போ இப்படி செய்யுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |