பாத்ரூமில் உப்பு கரை படிந்த தரையை புதியது போல மாற்ற இந்த Tricks மட்டும் போதும்..!

Advertisement

Uppu karai Poga Tips in Tamil

பொதுவாக வீட்டில் புதிதாக பாத்ரூம் கட்டி முடித்த பிறகு இருந்த பளபளப்பு எப்போதும் இருப்பதில்லை. ஆனால் அனைவரும் நம்முடைய வீட்டிலும் பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று உப்பு கரை படியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக நிறைய டிப்ஸினை பயன்படுத்தி சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி சுத்தம் செய்யும் வேலை என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். இனி நீங்கள் இது மாதிரி கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 1/2 டம்ளர் ஜெல் போதும் உங்கள் வீட்டு பாத்ரூமில் உப்பு கரை படிந்த அனைத்து இடங்களும் புதியது போல பளபளக்கும். மேலும் கேஸ் அடுப்பையும் கை வைக்கலாமல் சுத்தம் செய்வது எப்படி என்றும் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!

பாத்ரூம் உப்பு கரை நீங்க: 

டிப்ஸ்- 1

பாத்ரூம் உப்பு கரை நீங்க

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஜெல் தயார்.

இப்போது நீங்கள் தயார் செய்த அந்த ஜெல்லில் ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து அதில் நனைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஜெல்லில் நனைத்த அந்த பேப்பரை உங்களுடைய பாத்ரூம் சுவரில் உப்பு கரை படிந்த இடத்தில் கைகளால் தேய்த்து ஒட்டி விடுங்கள்.

5 நிமிடம் கழித்து அந்த பேப்பரை எடுத்து விடுங்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் ஜெல்லை தொட்டு சுத்தம் செய்தால் போதும் உப்பு கரை எளிதில் மறைந்து பாத்ரூம் புதியது போல பளபளக்கும். 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்- 2

easy kitchen tips in tamil

ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 ஸ்பூன் சமையல் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த ஜெல்லை ஒரு சிறிய பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள்.

அடுத்ததாக நீங்கள் தயார் செய்த அந்த ஜெல்லை துணியில் நனைத்து கொண்டு உங்கள் வீட்டில் கேஸ்ஸின் மேல் பகுதி மற்றும் கிச்சனின் மற்ற இடங்களையும் சுத்தம் செய்தால் போதும். கிச்சன் பளபளப்பாக மாறிவிடும் மற்றும் பூச்சிகளும் வராது.

அதுமட்டும் இல்லாமல் சுவரில் குழந்தைகள் பேனாவால் எழுதி இருந்தாலும் அதனை இந்த ஜெல்லால் துடைத்து மறைய செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ இந்த பவுடரை Use பண்ணா போதும் பாத்ரூமில் பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் வராமல் இருக்கும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement