உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய இப்படி பண்ணுங்க..!

டைல்ஸ் உப்பு கறை நீங்க | Uppu Karai Poga

பாத்ரூம் கட்டிய புதிதில் பளிச்சென்று இருக்கும். நாளடைவில் பழையதாகவும் உப்பு கறை படிந்திருக்கும். இதனை நீக்குவதற்காக பல முறைகளை ட்ரை பண்ணுவோம். ஆனாலும் உப்பு கறை நீங்கியிருக்காது. இதனை நீக்குவதற்கு கடைகளில் விற்கும் Liquid பயன்படுத்த வேண்டியதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உப்பு கறை படிந்த இடத்தை சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டைல்ஸ் உப்பு கறை நீங்க:

டைல்ஸ் உப்பு கறை நீங்க

ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா, துணி துவைக்கும் பவுடர், விம் LIQUID, எலுமிச்சை பழம் சாறு சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

இந்த LIQUID –யை பாத்ரூம் பீங்கான் மற்றும் பைப் போன்றவற்றில் தெளித்து ஊற விடவும். ஊறுகின்ற நேரத்தில் சுவற்றில் உள்ள உப்பு கறையை நீக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் ⇒  வீட்டின் Hall முதல் Bathroom தரை வரை பளிச்சென்று இருக்க இதை மட்டும் பண்ணுங்க..!

சுவற்றில் தண்ணீர் சுத்தமாக இருக்க கூடாது, காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போது கத்தியை வைத்து சுரண்டினால் உப்பு கறை நீங்கிவிடும்.

இல்லையென்றால் செய்து வைத்திருக்கின்ற LIQUID-யை சுவற்றில் தெளித்து பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.

பாத்ரூம் பளிச்சென்று இருக்க:

டைல்ஸ் உப்பு கறை நீங்க

வாரத்தில் ஒரு நாள் பாத்ரூமை இது மாதிரி க்ளீன் செய்தால் பளிச்சென்று இருக்கும்.

முதலில் பாத்ரூமை ஒட்டடை அடித்து விடவும். பின் டாய்லெட்டை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் LIQUID-யை கொண்டு க்ளீன் செய்யவும்.

சுவரை கிளின் செய்வதற்க்கு ஒரு கப்பில் சோடா உப்பு, வினிகர் சேர்த்து கலந்து விடவும். இந்த LIQUID-யை சுவர் முழுவதும் தெளித்து விடவும். ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விடவும். அதே போல் தரையிலும் தெளித்து துடைப்பம் வைத்து தேய்த்து விடவும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால் பாத்ரூமில் உப்பு கறை படியாமல் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil