கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல் உளுந்து வடை புஸ்ஸுன்னு மொறு மொறுன்னு வர டிப்ஸ்..! Urad Dal Vadai Crispy With Tips..!
பொதுவாக பலர் உளுந்து வடையை விட, பருப்பு வடையை தான் அதிகமாக செய்வார்கள் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால். பருப்பு வடை செய்வதற்கு அதிக வேலை இருக்காது. மிக எளிதாக செய்துவிடலாம். ஆனால் உளுந்து வடை செய்வது எளிய வேலை இல்லை மாவை பக்குவமாக அறிக்கை வேண்டும், மாவை தண்ணியாக அரைத்துவிட்டால் பிறகு வடை நன்றாக வராது. பிறகு வடையும் அதிகளவு தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிடும். இதன் காரணமாகவே நிறைய பேர் உளுந்து வடை செய்வதை விட பருப்பு வடை செய்வதை தேர்ந்தெடுக்கின்றன. இன்று நாம் கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல் உளுந்து வடை புஸ்ஸுன்னு மொறு மொறுன்னு வர டிப்ஸ்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல் உளுந்து வடை புஸ்ஸுன்னு மொறு மொறுன்னு வர டிப்ஸ்..! Urad Dal Vadai Crispy With Tips:
ஒரு கப் உளுந்தை இரண்டு முறை நன்றாக அலசிய பிறகு அவற்றில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பிறகு உளுந்தில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் வடிகட்டி ஊறவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு மிக்சியை திறந்து மூன்று ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும். பிறகு மீண்டும் மிக்சியை திறந்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி உளுந்தை அரைக்க வேண்டும். (குறிப்பு: உளுந்து ஊறவைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம்)
இவ்வாறு அரைத்த பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளை அதனுடன் சேர்த்து அரைக்கவும். அளவு தான் அதன்பிறகு நீங்கள் பொடிதாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இடித்த மிளகு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு மற்றும் இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும். அளவு தான் உளுந்து வடைக்கான மாவு தயார்.
பிறகு உங்களுக்கு தேவையான அளவில் வடை தட்டி எண்ணெயில் போட்டு சுட்டெடுத்தால் எண்ணெய் குடிக்காத, மொறு மொறுப்பான உளுந்து வடை தயார். கண்டிப்பாக இங்கு கூறப்பட்டுள்ள முறை படி உளுந்து வடைக்கு மாவு அரைத்து பாருங்கள். உளுந்து வடை அருமையாக வரும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |