குப்பையில் தூக்கி எரியும் புளித்த மாவை வைத்து வீட்டில் உள்ள சிங்கை புதிது போல ஆக்கலாம்.! இன்னும் பல விஷயங்கள் உள்ளது

useful home tips in tamil

சிங்க் அடைப்பு

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வீட்டு பெண்களுக்கு உதவும் வகையில் சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம். வீட்டில் உள்ள சிங்கை என்ன தான் சுத்தம் செய்தாலும் பழையது போலவே இருக்கும், இன்னொன்று வீட்டில் உள்ள வாளிகள் வளவள வென்று இருக்கும், மற்றும் குழந்தைகளின் சட்டையில் பேனா, மற்றும் பென்சில் கரை இருக்கும் போன்றவற்றை எப்படி நீக்குவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

சிங்கை புதிது போல:

சிங்கை புதிது போல ஆக்குவதற்கு வீட்டில் உள்ள புளித்த மாவு ஒன்றே போதும். எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம். சிங்க் முழுவதும் புளித்த மாவை அப்பளை செய்யுங்கள். அப்பளை செய்து ஒரு 1/2 மணி நேரத்திற்கு அப்படியே ஊறட்டும். பிறகு கம்பி நாரை பயன்படுத்தி நன்றாக தேயுங்கள். தேய்த்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டின் சுவரில் உள்ள பேனா கறை மற்றும் அழுக்குகளை நீக்க சூப்பர் ஐடியா.!

வாளியில் உள்ள வழவழப்பு தன்மை நீங்க:

வாளியில் எப்பொழுதும் தண்ணீர் ஊற்றி வைப்பதால் வழவழப்பு தன்மை உடையதாக இருக்கும். அதை நீக்குவதற்கு புளித்த மாவை வாளி  உட்புறம், பின்புறம் புளித்த மாவை முழுவதும் அப்ளை செய்யுங்கள். பின் கம்பி நாரை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள். இப்போ பாருங்க புதிய வாளி போல இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் சிங்க் மட்டும் வாளிக்கு மட்டுமில்லை வாஸ் பேஷன், தண்ணீர் பைப் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

சட்டையில் பேனா கறை நீங்க:

குழந்தைகளின் சட்டையில் பேனா மற்றும் பென்சில் கறை இருக்கும் அதனை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். கறை உள்ள இடத்தில் சிறிதளவு Dettol ஊற்றி கையை வைத்து சொரண்டவும், அல்லது பிரஸ் பயன்படுத்தி தேயுங்கள். பின் சட்டையை அலசி விடுங்கள். எந்த கறை சட்டையில் இருந்தாலும் நீங்கி விடும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil