Benefits Of Banana In Tamil
வாழைபழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். வாழைபழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றது. இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பழமாகும். அதுமட்டுமில்லாமல் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய பழங்களில் ஒன்றாகும். செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் வாழைப்பழம் நல்ல தீர்வை கொடுக்கின்றது. வாழைப்பழத்தின் நன்மைகளை உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் வாழைப்பழத்தின் தோல்களின் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா. அதன் நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
உரம் :
வாழைப்பழ தோலில் கால்சியம், வைட்டமின், மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் உங்கள் வீட்டு தோட்டத்தில் வாழைபழத்தோளை உரமாக போடலாம். இதனால் செடிகளுக்கு சரியான சத்துக்கள் கிடைத்து செடிகள் நன்றாக வளரும்.
பல் ஆரோக்கியம் :
சிலர் பற்களில் மஞ்சள் நிறம் படிந்து அசிங்கமாக இருக்கும். இது ஒரு சத்து குறைபாடு. அல்லது அதிக சூடான டீ மற்றும் காஃபீ எடுத்துக்கொள்ளும்போது பற்களின் வெண்மை நிறம் மங்கி மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை சரி செய்ய வாழைபழத் தோல்னை உங்கள் பற்களின் மேல் நன்றாக தேய்த்து வர வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்தால் உங்கள் பற்க்கள் நாளடைவில் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.
அழகான சருமம் :
வாழைபழத் தோல்னை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வர உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் காணப்படும். வாழைபழத் தோல்ல் இருக்கும் வழவழப்புத் தன்மை உங்கள் சருமத்தையும் வளவளப்புடன் வைத்திருக்க செய்யும். முகம் நன்றாக க்ளோவாக பளபளப்பாக இருக்கும்.
ஷைனிங் முடி :
பெண்கள் அனைவருக்குமே தங்களுடைய முடி வளவளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. சில பெண்களுக்கு முடி நிறைய இருக்கும். ஆனால் முடி ஷைனிங்காக இருக்காது. அதற்கு வாழைபழத் தோலினை அப்படியே எடுத்து முடியில் தேய்த்தாலும் நன்று தான் அல்லது வாழைபழத் தோலினை மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து முடியில் அப்ளை செய்தாலும் சரிதான். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் பரட்டையான முடிக்கூட ஸ்மூத்தாக மாறிவிடும்.
உங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |