Valaipalam Ketu Pogamal Iruka Tips
பொதுவாக நம்முடைய வீடுகளில் எந்த வகையான பழங்களை வாங்கினாலும், வாங்காமல் இருந்தாலும் கூட வாழைப்பழத்தை மட்டும் வாங்காமல் இருக்க மாட்டார்கள். அதேபோல் வீடுகளில் சுப நிகழ்ச்சி மற்றும் கெட்ட நிகழ்ச்சி என இதுவாக இருந்தாலும் வாழைப்பழம் கண்டிப்பாக வாங்குவார்கள். இவ்வாறு பார்க்கையில் வாழைப்பழத்தின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது. அப்படி பார்த்தால் இதனுடைய தேவைகள் அதிகமாக இருப்பது போலவே இதில் சத்துக்களும் பலவற்றை நிறைந்து உள்ளது. என்ன தான் வாழைப்பழத்தில் சத்துக்கள் இருந்தாலுமே கூட அதனை நீண்ட நாட்கள் கெடாமல் பார்த்துக்கொள்வது என்பது சற்று கடினமான ஒன்று. ஆகவே வாழைப்பழத்தை எவ்வாறு கெடாமல் பார்த்து கொள்வது என்பது டிப்ஸினை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாழைப்பழம் வீணாகாமல் இருக்க டிப்ஸ்:
டிப்ஸ்- 1
வாழைப்பழத்தை எப்போது கடையில் இருந்து வாங்கி வந்தாலும் கூட அதனை பாலித்தீன் கவர்களில் அடைத்து வைக்கக்கூடாது. ஏனென்றால் இவ்வாறு வைப்பதன் மூலம் வாழைப்பழம் வீணாகிவிடும். அதனால் காற்று ஓற்றமாக வைக்க வேண்டும்.
டிப்ஸ்- 2
அதேபோல் வாழைப்பழத்தினை தரையிலோ அல்லது நாற்காளிகளிலோ வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மேலே கயிறு கட்டியோ அல்லது ஆங்கர் போல் இருப்பதிலோ தொங்க விட வேண்டும்.
டிப்ஸ்- 3
நீங்கள் வாங்கி வந்த வாழைப்பழம் நன்றாக பழுத்த நிலையில் இருக்கிறது என்றால் அதனை அரிசி வைக்கும் பாத்திரம் மற்றும் சணல் சாக்கு என இவற்றில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
டிப்ஸ்- 4
முக்கியமாக வாழைப்பழத்தில் இருக்கும் காம்புகளை நீக்கி விட்டு ஒன்று ஒன்றாக வைப்பது என்பது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் இவ்வாறு கம்பு நீக்கி வாழைப்பழத்தினை வைப்பதன் மூலம் வாழைப்பழம் விரைவில் அழுகும் நிலை ஏற்படும்.
ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் வாழைப்பழங்களை பராமரித்து வருவதன் மூலம் உங்களுடைய வீட்டில் உள்ள வாழைப்பழம் குறைந்தது 1 வாரம் வரை தோராயமாக கெடாமல் இருக்கும்.
இட்லி சாஃப்ட்டாக மல்லிப்பூ போல இருக்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |