இந்த வேசலினைஇதற்கு கூட பயன்படுத்துவீர்களா? இவ்வளவு நாட்கள் இது தெரியாமால் போச்சே?

Advertisement

Vaseline Uses Tips in Tamil

நண்பர்களே வணக்கம் அனைவரின் பியூட்டி பொருட்களில் இந்த பொருள் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி என்ன பொருள் என்று யோசிப்பீர்கள். வாஸ்லின் தான். இந்த ஒரு பொருளை பியூட்டி பொருள் மட்டும் நினைத்துவிட்டு அதற்கு மட்டுமே பயன்படுத்து வருகிறோம். ஆனால் இந்த ஒரு பொருளை வைத்து எவ்வளவு விஷயங்களுக்கு பயன்படுத்துவார்கள் என்று தெரியாதது. வாங்க இனி நாமும்  அனைத்திற்கும் பயன்படுத்திகொள்ளவோம்..!

வாஸ்லின் பயன்கள்:

முதலில் முகத்திற்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக சருமம் வறண்டு போகாமல் இருக்க இந்த வாஸ்லினை பயன்படுத்துவார்கள். சருமம் வறண்டுபோக நிறைய காரணம் இருக்கிறது. அதற்கு என்ன தீர்வு என்பதை செய்யாமல் அதனை மறைக்க இந்த வாஸ்லினை பயன்படுத்துவார்கள். சரி இனி அனைத்திற்கும் பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..!

டிப்ஸ்: 1

வாஸ்லின் பயன்கள்

 

நாம் நம்மை அழகா காட்டுவதற்கு முதலில் கையில் நெயில் பாலிஷ் போடுவோம். ஆனால் அதனை எவ்வளவு அழகாக போட்டாலும் விரலை சுற்றி அசிங்கமாக இருக்கும். ஆனால் இனி நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் விரலை சுற்றி வாஸ்லின் போடவும். பின்பு நெயில் பாலிஷ் போட்டால் கை அழகா இருக்கும். தேவை இல்லாத இடத்தில் நெயில் பாலிஷ் இருந்தால் அது மறைந்துவிடும்.

டிப்ஸ்: 2

 வாஸ்லின் நன்மைகள்

குழந்தை காதில் 2 அல்லது 3 நாட்கள் தோடு போடாமல் இருந்தால் ஓட்டை மறந்துவிடும். காதில் தோடு போடும் போது வலியை ஏற்படுத்தும். அதனால் தோடு போடுவதற்கு முன் வாஸ்லினை தடவிவிட்டு போட்டால் வலிக்காது. ஈசியாக காதுக்குள் போகும்.

டிப்ஸ்: 3

பித்தவெடிப்பு

அதேபோல் அதிகம் நடப்பதாலும் உடலில் சத்துக்கள் இல்லாததாலும் கால்களில் வெடிப்பு ஏற்படும் அப்போது தூங்குவதற்கு முன் வாஸ்லினை தடவி வந்தால் கால்களில் உள்ள வெடிப்பு மறந்துவிடும்.

டிப்ஸ்: 4

 vaseline uses tips in tamil

 

 

தலைக்கு கிளிப் வாங்குவது வழக்கம் அப்படி வாங்கிய கொஞ்ச நாட்களில் அதனுடைய புதிய தன்மை போகி பழையது போல் காணப்படும். அதன் மீது இருக்கும் தோல் பிரிந்துவிடும். ஆகையால் வாங்கியவுடன் அதன் மீது வாஸ்லினை தடவி வந்தால் பிரியவாய்ப்பு இல்லை.

டிப்ஸ்: 5

நாள் முழுவதும் நாம் நறுமணத்துடன் இருக்க நிறைய நறுமண பொருட்களை உடலில் அடித்துக்கொண்டு செல்வோம் இருந்தாலும் அதனுடைய நறுமணம் கொஞ்ச நேரத்தில் மறந்து விடும் அதேபோல் வியர்வை வாடை வர ஆரம்பித்துவிடும். அதனால் இனி நறுமண பொருட்களை உடலில் அடிக்குவதற்கு முன் இந்த வாஸ்லினை தடவிய பின் அடித்தால் நாள் முழுவதும் நற்மணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

டிப்ஸ்: 6

PARS

நாம் ஊர்களுக்கு சென்றால் இந்த பொருட்களை எடுக்க மறக்கவே மாட்டோம். அது தான் மணிபர்ஸ், பைகள் எடுத்து செல்வோம் அதில் இருக்கும் ஜிப் அப்போது தான் கிழ்ந்துவிடும். அதனால் ஊர்களுக்கு செல்வதற்கு முன்போ அல்லது கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்த ஜிப்புக்களுக்கு மேல்  வாஸ்லினை தடவினால் ஜிப் கிழிவதற்கு அல்லது உடைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

யார் வீட்டில் அந்துருண்டை பயன்படுத்துவீர்கள்..! இந்த பதிவை படித்துவிட்டு அது ஆபத்தா என்று தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement