வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான அளவுகள் உங்களுக்கு தெரியுமா..?

vatha kulambu masala ingredients in tamil

வத்த குழம்பு பொடி செய்வது எப்படி.?

அனைவருக்கும் வத்த குழம்பு என்றாலே மிகவும் பிடிக்கும். வத்த குழம்பு பிரியர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற குழம்புகளை விட வத்த குழம்பு தான் அதிகமாக பிடிக்கும். அத்தகைய வத்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சரியாக சமைத்து விடுவீர்கள். ஆனால் வெளியில் சென்றிருக்கும் இடத்தில் திடீரென உங்களை சமைக்க சொன்னார்கள் என்றால் கடையில் மசாலா பொடி வாங்கி சமைத்தால் உங்களுக்கு சமைக்க தெரியாது என்று சிலர் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் கடையில் வாங்கி சமைப்பது உங்களுடைய உடல் நலத்திற்கு நல்லது அல்ல. ஆகையால் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் வத்த குழம்பு பொடி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

மேலும் வெளியில் சென்றாலும் அல்லது வீட்டிலும் சமைத்தாலும் இந்த பொடியினை உங்களுடைய வீட்டிலேயே செய்து சுவையாக வத்த குழம்பு வைத்து அனைவரையும் வியக்க வைக்கலாம். சரி வாங்க வத்த குழம்பு பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Vatha Kulambu Masala Ingredients in Tamil:

மல்லி- 100 கிராம் 

காய்ந்த மிளகாய்- 100 கிராம்

மிளகு- 25 கிராம் 

வெந்தயம்- 1 தேக்கரண்டி

சீரகம்- 25 கிராம் 

துவரம் பருப்பு- 25 கிராம்

பச்சை அரிசி- 25 கிராம் 

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கையளவு 

கரம் மசாலா செய்ய தேவையான பொருட்கள் 👉👉 வீட்டிலேயே கரம்மசாலா செய்யலாம் 

வத்த குழம்பு பொடி செய்முறை:

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு பொன் நிறமாக வதக்கி சிறிது நேரம் ஆற விடுங்கள்.

வதக்கிய பொருட்கள் ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் வத்த குழம்பு பொடி தயாராகிவிட்டது.

இப்போது வத்த குழம்பு பொடி தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டோம். அடுத்து வத்த குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-கை கிளிக் செய்யுங்கள்.

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

Vatha Kulambu in Tamil

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்