Veedu Cleaning Tips in Tamil
ஒவ்வொருவருக்கும் சுத்தம் என்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்று நம் அனைவர்க்கும் தெரியும். உடலை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் மட்டும் போதாது. நாம் பயன்படுத்தும் பொருட்கள், வீடுகள் என நம்மை சார்ந்த அனைத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக நாம் வாழும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது கடினமான ஒன்றாக இருந்தாலும் அதற்கான எளிய முறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips of Cleaning House in Tamil:
முதலில் உங்கள் வீடுகளில் உள்ள தூசுகள், ஒட்டடைகள் என அனைத்தையும் நீக்க வேண்டும். அடுத்து வீட்டை தூசுகள் இல்லாமல் பெருக்கி கொள்ளவும்.
அடுத்து, தூசு படித்திருக்கும் பொருட்களை எல்லாம் ஈரத்துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
வீடுகளில் மேலே இருக்கும் பொருட்களை முதலில் துடைத்து அதன் பிறகு கீழே உள்ள பொருட்களை துடைக்க வேண்டும்.
பிறகு, வெறும் தண்ணீர் கொண்டு வீட்டை அலசி விட வேண்டும் அல்லது துடைக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் 2 மணி நேரம் செலவிட்டால் வீடு புதிதாகவே இருக்கும்
அடுத்து, ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி கொண்டு, அதில் ஷர்ப் தூள், ஷாம்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களிடம் வீடு துடைப்பதற்கான லிக்விடு இருந்தாலும் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த தண்ணீரை வீட்டில் எல்லா பகுதிகளிலும் தெளித்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பிறகு நல்ல தண்ணீர் கொண்டு மோப் போடுங்கள்.
மோப் போட்ட சிறிது நேரம் கழித்து ஃபேன் போடுங்கள்.
அதன் பிறகு, வீட்டில் பத்தியோ அல்லது சாம்புராணியோ கொளுத்தி வையுங்கள்..
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வேலை எளிதில் முடிவதோடு வீடு சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |