வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க..!

Advertisement

வீட்டை சுத்தம் செய்வது எப்படி..? | Veetai Suthamaga Vaipathu Eppadi in Tamil 

நாம் தினமும் வீட்டை பெருக்கி சுத்தமாக துடைத்து வைத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அது எப்போதும் போல் ஆகிவிடும். அப்படி இல்லாமல் வீடு எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருப்பதற்கு சில ஈஸியான வழிகள் உள்ளது. இதை நீங்கள் செய்தாலே உங்கள் வீடு எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருக்கும் மற்றும் உங்கள் வீட்டு வேலைகலும் எளிதாக முடிந்துவிடும். வீடு துடைக்கும் போது இதை மட்டும் செய்து பாருங்கள். வீடு செம்ம பாலீஷாகவும் நறுமணத்துடனும் இருக்கும். வாருங்கள் அந்த டிப்ஸ் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டை சுத்தமாக வைத்திருக்க சில டிப்ஸ்:

டிப்ஸ்: 1

முதலில் உங்கள் வீட்டை தினமும் பெருக்கும் போது ஒட்டடையை அடிக்க வேண்டும். அப்படி செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் சிலந்தி பூச்சி, தூசு போன்றவை இருக்காது.

டிப்ஸ்: 2

 வீட்டை சுத்தம் செய்வது எப்படி

நீங்கள் வீடு துடைக்கும் போதெல்லாம், ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் 1 ஸ்பூன் கல்உப்பு, 1 அந்துருண்டை(தூள் செய்தது) மற்றும் டெட்டால் போன்றவற்றை கலந்து வீடு துடையுங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் வீடு சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், நாம் கல் உப்பு கலந்து வீடு துடைப்பத்தால் நம் வீட்டிற்கும் இருக்கும் கண் திருஷ்டி நீங்குவதோடு, பூச்சிகள் வராமலும் இருக்கும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

டிப்ஸ்: 3

நாம் வீடு துடைக்கும் போது Fan போடா கூடாது. அப்படி நீங்கள் Fan போட்டு துடைத்தீர்கள் என்றால் துடைத்த இடமெல்லாம் திட்டு திட்டாக இருக்கும். எனவே வீட்டை துடைத்து முடிக்கும் போதுதான் Fan போட வேண்டும்.

டிப்ஸ்: 4

வீடு துடைத்து முடிந்ததும், ஒரு சின்ன பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் நீங்கள் பயன்படுத்தும் ஹேர் கண்டிஷ்னர் 1/2 ஸ்பூன் எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

இதை நீங்கள் வீடு காய துவங்கும் வேளையில் தரையில் தெளித்து துடைத்தீர்கள் என்றால் வீட்டில் தூசு படியாமல் இருப்பதோடு வாசனையாகவும் இருக்கும்.

இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் வீடு துடைக்கும் போதும் செய்தீர்கள் என்றால் உங்கள் வீடு பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

உங்கள் வீட்டு Washing Machine-ல் படிந்துள்ள அனைத்து கறைகளையும் போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

 

டிப்ஸ்: 5

 how to clean home easily in tamil

வீட்டு தரையில் எதாவது கரை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீரியில் பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு கலந்து ஒரு துணியில் நனைத்து கறை உள்ள இடத்தில் துடைதீர்கள் என்றால் உடனே கறை போய்விடும்.

டிப்ஸ்: 6

 வீட்டை சுத்தமாக வைத்திருக்க சில டிப்ஸ்

வீட்டில் பூச்சிகள் வரமால் இருக்க தசாங்கம் 1, ஜவ்வாது சிறிதளவு எடுத்து சாம்புராணி கரண்டியில் கொழுத்தி  வைத்தீர்கள் என்றால் இதிலிருந்து வரும் வாசனையால் பூச்சிகள் வரமால் இருக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement