வீட்டில் எலி தொல்லை நீங்க
அனைவருடைய வீட்டிலும் கொசு, ஈ மற்றும் கரப்பான் பூச்சி தொல்லையை விட எலி தொல்லை தான் அதிகாமாக இருக்கிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எலி இல்லாத வீடே இல்லை என்று தான் கூற வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக வீட்டில் ஏதாவது ஒரு பழமோ அல்லது காய்கறியினை பார்த்து இருப்போம். ஆனால் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த பொருள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியிருக்கும். அதற்கு பின்பு தான் தெரியவரும் இது எலியின் வேலை என்று. ஆகாயல் வீட்டில் இனி எலி தொல்லை இல்லாமல் இருப்பதற்கான ஒரு டிப்ஸினை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். இதனை மட்டும் நீங்கள் வீட்டில் செய்து பார்த்தால் போதும் எலி என்பதை உங்களுடைய வீட்டில் பார்க்கவே முடியாது. சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
எலி தொல்லையில் இருந்து விடுபட:
வீட்டில் உள்ள அனைவருக்கும் எலி தொல்லையில் இருந்து விடுபட என்ன தான் செய்வது என கேள்வி இருக்கும். அதற்கான தீர்வு என்னவென்றால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஜெல் தயாரித்து அதனை வீட்டில் எலி வரும் இடத்தில் தெளித்தால் போதுமானது.
தேவையான பொருட்கள்:
- பூண்டு- 3 பல்
- டெட்டால்- 3 சொட்டு
- எருக்கம் பூ இலை- சிறிதளவு
இதையும் படியுங்கள்⇒ வெறும் எலுமிச்சை பழம் மட்டும் போதும் வீட்டில் பூச்சிகள் எதுவும் வராமல் இருக்க..!
செய்முறை:
ஸ்டேப்- 1
முதலில் எடுத்து வைத்துள்ள பூண்டினை தோல் நீக்கி வைத்து கொள்ளவும். அதன் பின்பு அந்த பூண்டை கொஞ்சம் லேசாக தட்டி கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
இப்போது தட்டி வைத்துள்ள பூண்டை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் போடு விட வேண்டும். அதற்கு பிறகு டெட்டால் 3 சொட்டு அதில் விட வேண்டும்.
ஸ்டேப்- 3
சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை பார்த்தால் வெள்ளை நிறத்தில் வந்து விடும். அப்படி வரும் வரை அதனை எதுவும் செய்ய கூடாது.
ஸ்டேப்- 4
அந்த தண்ணீர் வெள்ளை நிறத்தில் வந்தவுடன் அதில் எருக்கம் பூ இலையினை அப்படியே போட்டு கொண்டு 10 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஸ்டேப்- 5
10 நிமிடம் கழித்த பிறகு பார்த்தால் அதில் ஒரு மாற்றம் வந்து உங்களுக்கு தேவையான ஜெல் தயார் ஆகிவிடும்.
இப்போது அந்த ஜெல்லை வடிகட்டி ஸ்பேரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். அவ்வளவு தான் வீட்டின் எலி தொல்லையினை சரி செய்வதற்கு ஜெல் தயார்.
இதையும் படியுங்கள்⇒ என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை வீட்டில் எலி வரும் இடங்களில் தெளித்து வந்தால் போதும் உங்களுடைய வீட்டிற்கு எலி வரும் போதே அதனுடைய வாசனை தாங்க முடியாமல் அப்படியே வீட்டுக்குள் வராமல் ஓடி விடும். நீங்களும் எலி பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |