வீட்டில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கா.! அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..

Advertisement

வீட்டில் பல்லி தொல்லை நீங்க

வீட்டில்  உள்ள அனைத்து சுவர்களிலும் ஏதாவதொரு பூச்சிகளின் தொல்லைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் அட்டகாசம் செய்வதில் பல்லியும் ஒன்றாக இருக்கிறது. இதனை பார்த்தாலே பலரும் அருவருப்பு அடைவார்கள். நாம் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால் வீட்டில் பூச்சிகள் இல்லமல் வைத்திருப்பது அவசியமானது. வீட்டில் அலமாரிகள் மற்றும் சமயலறையில் அட்டகாசம் செய்யும் செய்யும் பல்லிகளை விரட்டுவது எப்படி என்று யோசித்து கொண்டிருக்கிறார்களா.! அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து பல்லிகளை விரட்டுவது எப்படி இன்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பல்லியை விரட்டுவது எப்படி.?

மிளகு தூள்:

பல்லியை விரட்டுவது எப்படி

வீட்டில் உள்ள பல்லிகளை விரட்டுவதற்கு மிளகு தூள் சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதற்கு நீங்கள் கருப்பு மிளகை தூளாக அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள மிளகு தூளை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சுவற்றில் ஸ்ப்ரே செய்து விடவும். மிளகு தூள் இல்லையென்றால் மிளகாய் தூள் கூட சேர்த்து ஸ்ப்ரே செய்யலாம். காரத்தன்மைக்கு பல்லி வராது.

பூண்டு மற்றும் வெங்காயம்:

பல்லியை விரட்டுவது எப்படி

பூண்டு மற்றும் வெங்காயத்தின் வாசனைக்கு பல்லி வராது. இதற்கு பல்லி எந்த இடத்தில் அதிகமாக வருமோ அந்த இடத்தில் பூண்டு பற்கள் மற்றும் வெங்காயத்தை நறுக்கி எடுத்து கொள்ளவும். இதிலிருந்து சிறிய சிறிய துண்டுகளாக எடுத்து பள்ளிகள் வரும் இடத்தில் வைக்க வேண்டும்.

உங்க வீட்டு கிச்சன் பக்கமே கரப்பான் பூச்சி வரக்கூடாதுனா இதை செய்யுங்க போதும்..!

அந்துருண்டை:

பல்லியை விரட்டுவது எப்படி

அந்துருண்டை வாசனை மனிதர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் பல்லிகளுக்கு அந்துருண்டை வாசனைக்கு பல்லிகள் வராது. இதற்கு வீட்டின் சமையலறை, அலமாரி, பெட்ரூம் போன்ற இடத்தில் அந்துருண்டைகளை வைக்கவும். இதனால் பல்லி தொல்லை இருக்காது.

பல்லிகள் வராமல் தடுப்பது எப்படி.?

வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். மேலும் ஜன்னல்களில் கொசு வலை பயன்படுத்த வேண்டும்.

உணவுகளை மூடி வைக்க வேண்டும். உணவு மட்டுமில்லை நொறுக்கு தீனிகள், ஸ்விட்ஸ் போன்ற அனைத்தயுமே மூடி வைக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கி இல்லாதது போல் வைத்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே பல்லி தொல்லை இருக்காது.

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை செய்யுங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement