Vegetable Storage Tips in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம் அதாவது நாம் என்ன தான் பிரஷ்ஷாக மார்க்கெட்டில் வாங்கி வந்தாலும், இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே காய்கறிகள் காய்ந்து ஒரு மாதிரி மாறிவிடும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். அதாவது காய்கறிகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாள் கெடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க காய்கறிகள் நீண்ட நாள் வரை கெடாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்: 1
ஃபிரிட்ஜில் பச்சை மிளகாவை வைக்கும் போது அவற்றில் இருக்கும் காம்புகளை நீக்கிவிட்டு ஒரு கேரி பேக்கில் அல்லது ஒரு டப்பாவில் மூடி போட்டு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதினால் பச்சை மிளகாய் நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும்.
இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்
டிப்ஸ்: 2
கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் அப்படியே வைத்து பயன்படுத்தினால் இரண்டு நாட்களிலேயே வாடி ஒரு மாதிரி காய்ந்து போய்விடும். ஆக கறிவேப்பிலையை உருவி ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், கிட்டத்தட்ட 15 நாட்கள் கறிவேப்பிலை ஃபிரிட்ஜில் பிரஷ்ஷாகவே இருக்கும். அதுவே ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து பயன்படுத்தினால் கூட ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ்: 3
காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்கும் போது காட்டன் துணியில் அல்லது பையில் லேசாக தண்ணீர் தெளித்து அந்த துணியில் காய்கறியை வைத்து காற்று புகாத அளவிற்கு துணியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தீர்கள் என்றால் காய்கறிகள் நீண்ட நாட்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ்: 4
தக்காளி பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கும் போது தக்காளியில் மேல் புறம் சிறிய பள்ளமாக இருக்கும் அல்லவா அந்த இடத்தில் சிறிய அளவில் செலோ டேப்பை நறுக்கி ஒட்டிக்கொள்ளுங்கள். அதாவது மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.
பிறகு ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த பவுலில் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் வைத்து. ஒரு பிளேட்டை போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் இப்படி செய்தால் ஒரு மாதம் வரை தக்காளி அழுகி போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ்: 5
முட்டைகோஸை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அவற்றில் இருக்கும் தண்டு பகுதியை அகற்றிவிட்டு அதனுள் ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து சிறிதளவு தண்ணீரை ஸ்ப்ரே செய்யுங்கள். பின் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதினால் 15 நாட்கள் வரை முட்டைகோஸ் கெட்டு போகாமல் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!
டிப்ஸ்: 6
பொதுவாக பூண்டு சைவம் மற்றும் அசைவம் உணவு இரண்டும் செய்ய தேவைப்படும். ஆக பூண்டை பொதுவாக இரண்டு கிலோ வரை வாங்கி வைத்துக்கொள்வார்கள். இவ்வாறு நிறைய வாங்கி வைக்கும் போது சில சமயம் அந்த பூண்டை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தோம் என்றால், பூண்டு முளைக்க ஆரம்பித்துவிடும் அதனை தவிர்க்க, ஒரு கேரி பேக்கில் பூண்டை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் டீத்தூள் தூவி கேரி பேக்கை இறுக்கமாக கட்டி வைத்துக்கொள்ளுங்கள். பின் உங்களுக்கு எப்போது எல்லாம் பூண்டு தேவைப்படுகிறதோ அப்போது எல்லாம் கேரிபேக்கை திறந்து பூண்டை எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் கிட்டத்தட்ட பூண்டு 6 மாதங்கள் வரை கேட்டு போகாமல் இருக்கும்.
டிப்ஸ்: 7
கேரட் ஒரு 3 அல்லது 4 நாட்கள் தான் பிரஷ்ஷாக இருக்கும். பிறகு கேரட்டின் மேல் இருக்கும் தோளில் சுருக்கம் விழுந்து, கருமையாக மாறிவிடும். இவற்றை தவிர்க்க ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் வெங்காயம் தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் பின் அதன் மேல் கேரட்டை வைத்து பயன்படுத்தலாம், இவ்வாறு செய்வதினால் கேரட் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும்.
கண்டிப்பாக மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |