Vellai Thuni Karai Neenga
துணியை துவைப்பது பெரிய வேலையாக இருக்கும். அதிலும் வெள்ளை துணியை துவைப்பது கஷ்டமான வேலையாக இருக்கிறது. வெள்ளை துணியை போடும் போது எந்த கறையும் படாமல் கவனமாக இரு என்று தான் சொல்லி தான் அனுப்புவார்கள். அப்படி இருந்தும் சாப்பிடும் போது அல்லது பேருந்தில் செல்லும் போது தெரியாமல் ஏதோ ஒரு கறையானது படிந்து விடும். இதனை சரி செய்வதற்காக பல முறைகளை பின்பற்றுவார்கள். அவை சிலபேருக்கு பலனை கொடுத்திருக்கும். சில பேருக்கு பலனை கொடுத்திருக்காது. ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள முறையை பின்பற்றினால் 100% ரிசல்ட் வரும். அதனால் இந்த முழு பதிவை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
உப்பு | எலுமிச்சை:
வெள்ளை சட்டையில் உள்ள விடாப்பிடியான கறைகள் நீங்குவதற்கு கல் உப்பு, எலுமிச்சை போன்றவை சிறந்த பலனை தெரிகிறது. அதற்கு நீங்கள் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர், ஒரு கைப்பிடி கல் உப்பு, பாதி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் கறையுள்ள வெள்ளை துணியை சேர்த்து ஊற வைத்து கொள்ள வேண்டும். ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எடுத்து பார்த்தால் பாதி கறை நீங்கியிருக்கும். மீதி இருக்கும் கறைகளை பிரஸ் அல்லது கையால் தேய்த்தால் முழு கறைகளும் நீங்கிவிடும்.
வெள்ளை சட்டையில் உள்ள மஞ்சள் கறை நீங்க:
வெள்ளை சட்டையில் இருக்கும் இருக்கும் மஞ்சள் கறை நீங்குவதற்கும், வியர்வையினால் ஏற்படும் கறைகளை நீக்குவதற்கும் வெள்ளை வினிகர், காபி, தேநீர் போன்றவை சிறந்த பலனை தரும். நீங்கள் ஊற வைக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் கறையுள்ள சட்டைகளை பயன்படுத்த வேண்டும். இதனை ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பாதி கறைகள் நீங்கிவிடும். பிரஸ் அல்லது கையால் தேய்த்தால் கறைகள் எல்லாம் நீங்கி விடும்.
துணிகளில் படிந்துள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க உப்புடன் இதை மட்டும் கலந்து தடவுங்க
துரு கறைகள் நீங்க:
வெள்ளை துணியில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் துரு கறைகளுக்கு எலுமிச்சை சாறு சிறந்த பலனை தரும். ஒரு கப்பில் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை அழுக்கு உள்ள இடத்தில் தேய்த்து ஊற வைக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் கழித்து அழுக்கு உள்ள இடத்தை தேய்த்தால் கறை எல்லாம் நீங்கிவிடும்.
வெள்ளை துணியில் உள்ள எண்ணெய் கறை நீங்க:
பொதுவாக எந்த துணியில் எண்ணெய் பட்டாலும் அந்த கறைகள் நீங்காது. கலர் உள்ள துணியில் எண்ணெய் கறை பட்டால் அந்தளவிற்கு தெரியாது. ஆனால் வெள்ளை துணியில் எண்ணெய் கறை ஆனது அப்படியே தெரியும். இதனை நீங்குவதற்கு சுண்ணாம்பு சிறந்த தீர்வை தரும். சுண்ணாம்பை எண்ணெய் பட்ட இடத்தில் வைப்பதன் மூலம் எண்ணெயை உறிந்து விடும். அதன் பிறகு துணிதுவைக்க பயன்படுத்தும் பவுடரை சேர்த்து கலந்து தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும்.
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |














