வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்வது எப்படி..?
ஹலோ நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் வெள்ளி கொலுசு மற்றும் பொருட்களை புதிதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் அதற்கு சில டிப்ஸ். இந்த பிரச்சனையானது என்பது அனைவருக்கும் உள்ளது. வெள்ளி கொழுக்களை வைத்திருந்தால் அனைவருக்கும் அதனை 6 மாதத்திற்கு ஒருமுறை கொலுசுகளை வெள்ளி பொருட்களையும் மாற்றுவது பெண்களுக்கு இது பழக்கமாக ஆகிட்டது. ஆனால் இனி அதனை பற்றிய கவலை தேவையில்லை வீட்டிலேயே இதுபோன்ற சூப்பரான டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்.
How to Clean Silver Kolusu in Tamil:
டிப்ஸ்-1
ஒரு கடாயில் கொலுசு நனையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுடவைக்கவும் துணி துவைக்கும் பவுடர் இருந்தால் அதில் போட்டு அதன் கூடவே கொலுசையும் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும். இப்படி செய்வதால் கொலுசுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறும்.
தண்ணீரை கொதிக்கவிட்டு பிறகு அதில் அரைமணி நேரம் ஊறவிடவும் இப்படி ஊறவிடுவதால் அதனை சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும்.
இப்போது கொலுசை வெளியில் எடுத்து ஒரு பழைய பல்துலக்கும் பிரஸ் வைத்து அதனை நன்கு தேய்த்து வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி எடுக்கலாம். கொலுசு புத்தம் புதியதாக இருக்கும்.
டிப்ஸ்-2
பழைய வெள்ளி ஜெயினை புதியதாக மாற்ற டிப்ஸ். அனைவரின் வீட்டிலும் தயிர் இருக்கும். இந்த தயிரை ஒரு சிறிய டம்லரில் ஊறிக்கொள்ளவும். பின்பு அதில் உங்களுடைய ஜெயினை போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.
மறுநாள் காலையில் எழுந்ததும் தயிரில் ஊறவைத்த கொலுசுகளை அல்லது ஜெயினை எடுத்து நன்கு பிரஸ் போட்டு தேய்கவும். தேய்க்கும் போது பல் துலக்கும் பேஸ்ட் சேர்த்து நன்கு தேய்க்கவும். இதுபோல் செய்து பாருங்கள் உடனே உங்களுடைய கொலுசு புதுசு போல் இருக்கும்.
பித்தளை பாத்திரம் பளபளன்னு இருக்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |