வெள்ளி மற்றும் தங்கம் பளபளப்பாக மாற
பொதுவாக நாம் வீட்டில் உள்ள பொருட்களாக இருந்தாலும் சரி, அணிந்திருக்க கூடிய பொருட்களாக இருந்தாலும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆனால் நாம் அணிந்திருக்க கூடிய வெள்ளி பொருள் மற்றும் தங்கமானது வாங்கிய புதிதில் பளிச்சென்று இருக்கும், நாளடைவில் நமது உடல் சூட்டினால் நகைகள் பழையதாக மாறி விடும். இதனை பளிச்சென்று ஆக்குவது எப்படி என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் வெள்ளி மற்றும் தங்கம் பளிச்சென்று ஆக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெள்ளி பளபளப்பாக:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி பொருட்கள் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின் அதில் சமையல் சோடா 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இதனுடன் சுத்தம் செய்ய வேண்டிய பொருட்களையும் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் ஆறிய பிறகு உள்ளே உள்ள வெள்ளி பாத்திரங்களை எடுத்து கிளீன் செய்யலாம். அதாவது துவைக்க பயன்படுத்தும் பவுடர் எடுத்து கொள்ளவும், இதை பயன்படுத்தி வெள்ளி பாத்திரங்களை கிளீன் செய்தால் வெள்ளி பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்.
வெறும் 5 நிமிடம் போதும் சிங்க் அடைப்பை அசால்ட்டா நீக்கி விடலாம்
தங்கம் பளபளப்பாக:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதில் கிளீன் செய்ய வேண்டிய தங்க நகைகளை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட வேண்டும்.
கொதித்த தண்ணீரானது ஆறிய பிறகு நகைகளை எடுத்து பிரஷை பயன்படுத்தி ஒரு தேய் தேய்த்து விட்டு கழுவ வேண்டும்.
இல்லை இது மாதிரி செய்வதற்கு டைம் இல்லையென்றால் ஒரு கிண்ணத்தில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் கிளீன் செய்ய வேண்டிய நகைகளை சேர்த்து ஊற விட வேண்டும்.
ஒரு 1/2 நேரத்திற்கு ஊற விட வேண்டும். இதுவே அதிக அழுக்கு நிறைந்த நகைகளாக இருந்தால் 1 மணி நேரத்திற்கு ஊற வேண்டும். அதன் பிறகு பழைய பல் துலக்கும் பிரஸ் இருந்தால் அதை பயன்படுத்தி கிளீன் செய்யலாம்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |