வெங்காயம் அழுகாமல் இருக்க டிப்ஸ்
பொதுவாக நாம் சமைக்கும் காய்கறிகளில் வெங்காயம் இல்லாமல் எந்த உணவையும் சமைக்க முடியாது. வெங்காயம் அன்றாட சமையலுக்கு தேவைப்படுவதால் அவற்றை கிலோ கணக்கில் தான் வாங்கி வைப்போம். அப்படி சில நேரங்களில் நாம் வாங்கி வைக்கும் வெங்காயமானது சீக்கிரமே கெட்டு போகிவிடும். அதனால் இந்த பதிவில் வருடக்கணக்கில் வெங்காயம் அழுகாமல் இருப்பதற்கு டிப்ஸை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெங்காயம் அழுகாமல் இருக்க டிப்ஸ்:
டிப்ஸ்:1
முதலில் வெங்காயம் வாங்கும் போது நல்ல வெங்காயமாக வாங்கி கொள்ளவும். அதாவது வெங்காயத்தில் கீறல் இல்லாமலும், அழுகாமலும் பார்த்து வாங்க வேண்டும். மேலும் கருப்பு நிறத்தில் ஏதும் இல்லாமலும் பார்த்து வாங்க வேண்டும்.
டிப்ஸ்:2
வாங்கி வந்த வெங்காயத்தை வெயிலில் 2 மணி நேரத்திற்கு காய வைத்து கொள்ளவும். இது போல் காய வைத்த வெங்காயத்தை தாம்பூலம் அல்லது சல்லடை போன்ற பாத்திரங்களில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
பல வருடமாக உங்க பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்துள்ளதா.! அதை நீக்க இதை மட்டும் செய்யுங்க
நீங்கள் வைக்கும் பாத்திரத்தில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஈர்ப்பதத்தோடு வைத்தால் சீக்கிரமே வெங்காயம் அழுகி விடும். மேலும் வெங்காயம் வைக்கும் பாத்திரத்தை மூடி வைக்க கூடாது.
காற்று போகின்றது போல் தான் வெங்காயத்தை வைக்க வேண்டும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு வெங்காயம் கெட்டு போகாமல் இருக்கும்.
டிப்ஸ்:3
வெங்காயத்தை வைத்து விட்டு அப்படியே விட்டு விட கூடாது. தினமும் வெங்காயத்தை பார்க்க வேண்டும். அதில் வீணா போகின்ற நிலையில் ஏதும் வெங்காயம் இருந்தால் அவற்றை நீக்கி விட வேண்டும். ஏனென்றால் அதை அப்படியே விட்டு விட்டால் மற்ற வெங்காயமும் வீணாகி விடும்.
டிப்ஸ்:4
மாதத்தில் ஒரு வெங்காயத்தை காய வைப்பது அவசியமானது. அப்போது தான் வெங்காயம் கெட்டு போகாமல் நீண்ட நாட்களுக்கு அழுகி போகமால் இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |