Vengayam Kedamal Irukka
பொதுவாக நாம் அனைவருமே நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது என்றால் அது உணவு தான். அப்படி நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவினை தயாரிக்க தேவையான பொருட்களை நாம் மிக மிக கவனமாக தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வோம். ஆனாலும் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதிலும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மிக மிக குறைந்து காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும். அவற்றை எல்லாம் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அது நம்மால் முடியாமல் போகும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக உள்ள வெங்காயத்தை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வைத்திருக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெங்காயம் கெடாமல் இருக்க:
நமது சமையலின் முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான வெங்காயத்தை எவ்வாறு மாதக்கணக்கில் சேமித்து வைப்பது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
டிப்ஸ்- 1
முதலில் இந்த டிப்ஸிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- செய்தித்தாள் – 1
- பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பா – 1
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள வெங்காயத்தை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனின் தோல்களை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அதன் பிறகு நன்கு தண்ணீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.
அடுத்து அதனை ஒரு டிசுபேப்பர் அல்லது செய்தித்தாளை பயன்படுத்தி நன்கு துடைத்து கொள்ளுங்கள். குறிப்பாக அதில் முற்றிலும் இராம் இல்லாத அளவிற்கு துடைத்து கொள்ளுங்கள்.
1 மாதம் வரை பச்சை மிளகாய் வீணாகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Try பண்ணுங்க போதும்
அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 1 செய்தித்தாளை இரண்டாக நறுக்கி அதில் ஒரு பாதியை நாம் எடுத்து வைத்துள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவின் உள்ளே வைத்து அதன் மீது நாம் சுத்தம் செய்து வைத்துள்ள வெங்காயத்தை வைத்துவிட்டு அதனின் மீது மீதமுள்ள செய்தித்தாளை வைத்து நன்கு மூடி கொள்ளுங்கள்.
இதனின் மூலம் வெங்காயத்தை மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் வைத்து கொள்ள முடியும்.
டிப்ஸ்- 2
முதலில் நாம் வாங்கி வந்துள்ள வெங்காயத்தில் ஏதேனும் அழுகிய வெங்காயம் அல்லது முளைத்த வெங்காயம் இருந்தால் அதனை நீக்கிவிட்டு 1/2 மணிநேரம் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனின் மீது உள்ள சருகு போல் இருக்கும் தோலினை நீக்கிவிடுங்கள். அடுத்து நன்கு காற்றோட்டமான பாத்திரத்தில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள வெங்காயத்தை வைத்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் வெங்காயத்தை மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் வைத்து கொள்ள முடியும்.
1 மாதம் வரை தக்காளி கெட்டு போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எண்ணெய் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |