1 ஸ்பூன் ஜெல் போதும் 5 நிமிடத்தில் அனைத்து பாத்திரங்களும் புதியது போல பளபளக்க எப்படி தெரியுமா..?

Advertisement

கிச்சன் டிப்ஸ்

வீட்டில் தினமும் சமைப்பது தான் கடினமான வேலை என்று சிலர் நினைத்து இருப்பார்கள். ஆனால் சமைப்பதை விடவும் மிகவும் கஷ்டமான வேலை பாத்திரங்களை கழுவும் வேலை தான். சமையல் செய்யும் பாத்திரம் மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் மற்ற பாத்திரங்களையும் சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆகையால் பாத்திரம் கழுவ கஷ்டப்படும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இன்றைய பதிவு இருக்கும். 1 ஸ்பூன் ஜெல் போதும் 5 நிமிடத்தில் அனைத்து பாத்திரங்களும் புதியது போல பளபளக்க செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க அந்த டிப்ஸ் என்ன என்பது பற்றி விரிவாக படித்து பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

பாத்திரம் கழுவும் ஜெல் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. பல் துலக்கும் பேஸ்ட்- 1 ஸ்பூன் 
  2. சமையல் சோடா- 1 ஸ்பூன்
  3. விம் ஜெல்- 1 ஸ்பூன்
ஒட்டடை அடிப்பதில் இப்படி ஒரு Tricks இருக்கா தெரியாம போச்சே..!

Vessel Washing Tips in Tamil:

useful kitchen tips in tamil

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் பல் துலக்கம் பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது பேஸ்ட் கலந்து வைத்துள்ள தண்ணீருடன் 1 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து மீண்டும் நன்றாக 5 நிமிடம் கலந்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

5 நிமிடம் கழித்ததும் கலந்து வைத்துள்ள தண்ணீருடன் 1 ஸ்பூன் விம் ஜெல் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பாத்திரங்கள் பளபளக்க ஜெல் தயார். 

ஸ்டேப்- 4

கடைசியாக ஒரு பெரிய பாத்திரத்தில் பாத்திரம் கழுவும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு அதனுடன் நீங்கள் தயாரித்த ஜெல்லை ஊற்றி கையால் கலந்து வீட்டில் கழுவ வைத்து இருக்கும் பாத்திரங்களை அதில் ஊற வைய்யுங்கள்.

ஸ்டேப்- 5

பாத்திரங்கள் சிறிது நேரம் ஊறிய பிறகு வழக்கம் போல பாத்திரங்களை கழுவி விடுங்கள். இப்போது நீங்கள் கழுவிய பாத்திரங்களை பாருங்கள் புதியது போல பளபளப்பாக இருக்கும். 

இது மாதிரி நீங்கள் பாத்திரம் கழுவினால் எண்ணெய் பசையாக உள்ள பாத்திரம் கூட 5 நிமிடத்தில் புதியது போல பளபளக்கும்.

இதையும் படியுங்கள்⇒ டாய்லெட்டில் கரப்பான் பூச்சி மற்றும் நாற்றம் வராமல் பிரஷ்ஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement