வீட்டின் சுவரில் உள்ள பேனா கறை மற்றும் அழுக்குகளை நீக்க சூப்பர் ஐடியா.!

Advertisement

சுவர் சுத்தம் 

குழந்தைகள் உள்ள வீடு வீடாகவே இருக்காது. வீட்டை சுத்தம் செய்பவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். குழந்தைகள் எழுத ஆரம்பித்ததும் நோட் மற்றும் சிலேட்டில் எழுதுறதை விட வீட்டின் சுவரில் தான் அதிகம் எழுதுவார்கள். இது மாதிரி சுவற்றில் எழுதும் போது சொந்த வீடாக இருந்தால் பிரச்சனை இல்லை.ஆனால் வாடகை வீட்டின் சுவற்றில் எழுதிவிட்டால் வீட்டு ஓனர் சத்தம் போடுவார்கள். ஆனால் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் சுவற்றில் எழுத சொல்லலாம். ஏன் என்று கேட்கிறீர்களா.? சுவற்றில் எப்படி எழுதிருந்தாலும் அதை சுலபமாக நீக்கி விடலாம்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க

சுவற்றில் உள்ள கறைகளை நீக்க தேவையான பொருட்கள்:

  • வினிகர் –2 தேக்கரண்டி
  • சமையல் சோடா- 1 தேக்கரண்டி

கறை நீக்கும் முறை:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 2 தேக்கரண்டி வினிகர், 1 தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.

ஸ்டேப்: 2

பின் வீட்டில் ஏதும் ஸ்பிரே பாட்டில் இருந்தால் கலந்து வைத்த தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் உங்கள் வீட்டில் பிள்ளைகள் எங்கு கிறுக்கி வைத்திருக்கார்களோ அங்கு கலந்து வைத்த தண்ணீர்  ஸ்பிரேவை அடிங்க. ஒரு 5 நிமிடம் அப்படியே சுவற்றில் ஊறட்டும். பின் ஒரு காட்டன் துணியை வைத்து சுவற்றை துடையுங்கள்.

ஸ்டேப்: 4

காட்டன் துணி வைத்து போகவில்லை என்றால் சமையல் சோடாவை துணியை வைத்து சுவற்றில் துடையுங்கள். பிறகு தண்ணீர் ஸ்பிரேவை மறுபடியும் சுவற்றில் அடியுங்கள். ரொம்ப நாளாக இருந்த கறை என்றால் போவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். துடைத்து முடித்ததும் பாருங்க ஒரு கறை கூட இருக்காது.

ஸ்டேப்: 5

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸ் சுவற்றில் உள்ள கறைக்கு மட்டுமில்லை வீட்டில் எழுதுவதற்கு ஒயிட் போர்டு வைத்திருப்பார்கள். அதில் எழுதும் மார்க்கரில் இரண்டு விதம் இருக்கும். ஒரு மார்க்கர் எழுதினால் அழைத்து விடும். இன்னொரு மார்க்கர் வைத்து எழுதினால் அந்த எழுத்து போகாது. இந்த கறைகளுக்கும் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தலாம். மேலும் சுவற்றில் உள்ள விடாப்பிடியாக உள்ள கறைகளுக்கும் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தலாம்.

இந்த குறிப்பை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். பிடித்திருந்தால் Follow பண்ணிக்கோங்க நண்பர்களே..! உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவினை Share செய்யுங்கள்.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement