நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இதை Follow பண்ணுங்க..!

Advertisement

வியர்வை நாற்றம் வராமல் இருக்க

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடல் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருப்பதற்கு என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருக்கும் பிரச்சனையில் ஒன்று  வியர்வை நாற்றம். சில நபர்களுக்கு குளித்த சில நேங்களிலே வியர்வை நாற்றம் வர ஆரம்பித்துவிடும். மேலும் வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு கடைகளில் விற்கும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள்.

நீங்கள் வாசனை திரவியங்களை  எவ்வளவு காசு கொடுத்து வாங்கி அப்ளை செய்தாலும் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் இருக்கும். அதன் பிறகு வியர்வை நாற்றம் வந்துவிடும். ஆனால் இந்த பதிவில் சொல்லப்போகும் டிப்ஸை பயன்படுத்தினால் வியர்வை நாற்றம் வராமல் நாள் முழுவதும் ஃபிரஷாக இருக்கலாம். வாங்க எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம்..!

இதையும் படியுங்கள் ⇒ அக்குள் பகுதி துர்நாற்றம் வராமல் இருக்க இதை பண்ணுங்க

வாசனை திரவியம் செய்ய  தேவையான பொருட்கள்: 

  • ஏலக்காய் -5
  • சோம்பு- 1 தேக்கரண்டி
  • பட்டை- 2 துண்டு
  • வெட்டிவேர் –1/2 கைப்பிடி அளவு

வாசனை திரவியம் தயாரிக்கும் முறை:

வாசனை திரவியம் தயாரிக்கும் முறை

ஸ்டேப்:1

முதலில் 5 ஏலக்காயையும் நுனிக்கி கொள்ளவும். பின் சோம்பையும் நுனிக்கு கொள்ளவும். இவை இரண்டையும் ரெடி பண்ணி வையுங்கள்.

பின் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். பின் அதில் அரைத்து வைத்த ஏலக்காய் மற்றும் சோம்பு, பட்டை 2 துண்டு, வெட்டிவேர் 1/2 கைப்பிடி அளவு போன்றவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

1 லிட்டர் தண்ணீர் 1/2 லிட்டர் வரும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விடவும். நமக்கு தேவையான வாசனை திரவியம் தயாராகி விட்டது. இதை எப்படி? அப்ளை செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

வாசனை திரவியம் அப்ளை செய்யும் முறை:

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் செய்து வைத்துள்ள வாசனை திரவியத்தை சேர்த்து குளிக்கலாம். இந்த தண்ணீர் ஊற்றி குளித்ததும் சோப்பு பயன்படுத்தி குளிக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லை.

இல்லையென்றால் சோப்பு பயன்படுத்தி குளித்ததும் வாசனை திரவியத்தை உடல் முழுவதும்  தெளித்து கொள்ளலாம். ஒரு 5 நிமிடம் கழித்து நீங்கள் தண்ணீர் ஊற்றி குளித்து கொள்ளலாம்.

இந்த வாசனை திரவியத்தில் பயன்படுத்திருக்கின்ற வெட்டி வேர் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். தினமும் நீங்கள் இந்த வாசனை திரவியத்தை பயன்படுத்தலாம். இல்லையென்றால் வாரத்தில் 2 முறை பயன்படுத்தலாம்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இருக்கும் முகப்பருக்கள் மற்றும் கரும்பள்ளிகள் நீங்கும். இந்த குறிப்பை பயன்படுத்திய பிறகு வாசனை திரவியம் காசு கொடுத்து  வாங்க மாட்டீர்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement