வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வது எப்படி
பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பாட்டிலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த பாட்டிலை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமானது. இதனை சுத்தம் செய்ய மிகவும் கஸ்டப்படுகிறார்கள். இதனால் வாரத்தில் ஒரு நாள் அல்லது எப்போதாவது ஒரு முறை தான் பாட்டிலை சுத்தம் செய்கிறார்கள். இந்த பதிவில் தண்ணீர் பாட்டிலை ஈசியாக சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்:
பேக்கிங் சோடா:
தண்ணீர் பாட்டிலில் உள்பக்கம் பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு முறை குலுக்கி விட்டு ஒரு 1/2 ,மணி நேரம் அப்படியே விடவும்.
1/2 மணி நேரம் கழித்து பாட்டில் கிளீன் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்த்து கொள்ளவும். அதன் பிறகு தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவ வேண்டும்.
வினிகர்:
வாட்டர் பாட்டிலில் வினிகர் 1/2 கப், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து குலுக்கி விட வேண்டும்.
பிறகு காலையில் பாட்டில் கழுவ பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். இது போல செய்தாலே பாட்டில் பளிச்சென்று இருக்கும்.
பிளாஸ்க் சுத்தம் செய்வது எப்படி.?
பிளாஸ்க் கழுவதற்கு முதலில் வெந்நீரை எடுத்து கொள்ளவும். அதில் பாத்திரம் விளக்க பயன்படுத்தும் லிக்குவிட் இல்லையென்றால் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் கழித்து பாட்டில் கழுவ பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்.
இதனை வெயிலில் நன்றாக காய வைத்து விட்டு அதன் பிறகு பயன்படுத்தி கொள்ளலாம்.
மூடியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள்வும். இந்த தண்ணீரில் மூடியை ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். அதன் பிறகு பல் தேய்க்க பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |