மாதக்கணக்கில் காய்கள் கெடாமல் இருக்க
நமது உணவு தேவைகளில் முக்கியமானது காய்கள். பொதுவாக நாம் ஒரு வாரத்திற்கு தேவையான காய்களை ஒரே வேலையாக வாங்கி நம்முடைய பிரிட்ஜில் அடுக்கி விடுவோம். இப்படி செய்வதால், வேலைகளுக்கு செல்லும் பலருக்கு வேலை மிச்சமாகிறது. கோடைகாலங்களில் இது நல்ல வழி என்றாலும். குளிர்காலத்தில் நம்மால் அதிகப்படியான காய்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்த முடியாது. காரணம் காற்றில் உள்ள ஈரப்பதம். அதனால் காய் மற்றும் கனிகள் கூடிய விரைவில் அழுகிவிடும். இதனால் நம்மால் நமக்கு தேவையான பொருட்களை சேமிக்க முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வழிதான் என்ன? நமக்கு கிடைக்கும் சிறிது ஓய்வில் நாம் வீட்டிற்கு தேவையான காய் மற்றும் பழங்களை வாங்குகிறோம். ஆனால் அதனை சரியாக பாதுகாக்க நமக்கு தெரிவதில்லை. இன்றைய பதிவில் மாத கணக்கில் காய் அழுகாமல் பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Store Vegetables For Long Time in Tamil:
Tips 1:
நீங்கள் வீட்டிற்கு பச்சை மிளகாய் வாஙகி வந்தவுடன் அதில் இருக்கும் காம்பினை நீக்கி விடுங்கள். அதன் பிறகு காம்பு நீக்கிய பச்சை மிளகாயினை ஒரு கவரில் போட்டு அப்ப்டியே வைத்தால் போதும். இத்தகைய முறையினை செய்வதன் மூலம் 1 மாதம் ஆனாலும் கூட பச்சை மிளகாய் ஆனது வீணாகாமல் அப்படியே இருக்கும்.
Tips 2:
பச்சை மிளகாய், வெண்டைக்காய், இஞ்சி போன்ற காய்களை சந்தையில் இருந்து வாங்கி வந்த உடன் காய்களை தரம் பிரிக்க வேண்டும். பின்னர் காய்களை நன்றாக கழுவி அழுக்கு மண் போன பின்னர் மிளகாய் காம்புகளை நீக்கி காய்கள் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிய பின்னர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைத்து வைத்தால் மாத கணக்கில் காய்கள் கெடாமல் இருக்கும்.
Tips 3:
நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைக்கும் முன் ஒரு காட்டன் துணி அல்லது காகிதங்களை வைத்து அதன் மேல் காய்கள் வைத்து மூடவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் மாதக்கணக்கில் காய்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.
சமயலறையில் படிந்துள்ள எண்ணெய் கரையை நிமிடத்தில் போக்க என்ன செய்யலாம்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |