மொபைல் போன் நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா..!

Advertisement

மொபைல் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்வது

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம். பொதுவாக போனை கையில் வைத்து பயன்படுத்தும் போது தவறி விழுவது வழக்கம். ஆனால் அப்படி தவறி விழும் போது கீழே விழுந்தால் உடைந்து விடும். அதேபோல் தண்ணீரில் விழுந்தால் கவலை அடைவீர்கள். தண்ணீரில் போன் விழுந்து விட்டால் என்ன செய்வது என்றே பலருக்கும் தெரியாது. முதலில் பதற்றம் அடைய கூடாது. மேலும் தண்ணீரில் விழுந்த போனை சரி செய்வது எப்படி என்ற தகவல்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவை:

முதலில் மொபைல் போன் தண்ணீரில் விழுந்து விட்டது என்று அதே பார்த்து கொண்டே இருக்காமல் தண்ணீரிலிருந்து போனை முதலில் வெளியில் எடுங்கள்.

அடுத்து உங்களது போன் ஆனில் இருந்தால் Switch Off  பண்ணுங்க

போனில் இருக்கும் சிம் கார்டு, பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றை Remove செய்துடுங்கள்.

 மொபைலில் உள்ள தண்ணீரை எடுப்பதற்கு வெயில் இருக்கும் இடத்தில் போனை வையுங்கள். இல்லையென்றால் அரிசி இருக்கும் பாத்திரத்தில் போனை 24 மணி நேரம் வைத்திடுங்கள்.  

அடுத்து மொபைல் சரி பார்க்கும் இடத்திற்கு சென்று போனை service  செய்யுங்கள்.

மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய கூடாதவை:

உங்களது போன் தண்ணீரில் விழுந்து எடுத்ததும் போன் ஆப்பில் இருக்கு என்று என்ன ஆகிவிட்டதோ என்று நினைத்து On செய்ய முயற்சிக்காதீர்கள்.

அடுத்து போன் OFF -யில் இருக்கும் போது சார்ஜ் செய்யாதீர்கள்.

அடுத்து போன் ஸ்பீக்கரில் தண்ணீரில் இருந்தால் அதை வாய் வைத்து ஊதாதீர்கள். இப்படி செய்யும் போது அந்த இடத்தில் மட்டும் இருந்த தண்ணீர் மற்ற இடத்திற்கும் சென்றுவிடும். 

மொபைல் பயன்படுத்தும் போது கொஞ்சம் Carefull -அ பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement