What To Use To Clean The Bathroom Tiles
பாத்ரூமில் படிந்த உப்புக்கரையை போக்குவதற்கு நம்மில் பெரும்பாலோனோர் கெமிக்கல் கலந்த லிக்விடு மற்றும் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தி வருவோம். ஆனால் எந்தவிதமான கெமிக்கல் லிக்விடும் இல்லாமல் உப்புக்கரை படிந்த பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று சுத்தம் செய்யலாம். ஆமாங்க, பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருள் போதும். அனைவரின் வீட்டிலும் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஒரு பொருள் போதும் பாத்ரூம் பளிச்சென்று ஜொலிக்க வைக்க. ஓகே வாருங்கள் அந்த கெமிக்கல் இல்லாத பொருளை என்னவென்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Clean Bathroom Tiles in Tamil:
அப்பொருள் வேறொன்றுமில்லை. நாம் தினமும் வீட்டில் கோலமிடுவதற்கு பயன்படுத்தப்படும் கோலமாவு தான். கோலமாவினை வைத்து பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
முதலில், கோலமாவினை கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பாத்ரூம் டைல்ஸ் முழுவதும் தூவி கொள்ளுங்கள்.
பிறகு, பாத்ரூம் சுத்தம் செய்யும் பிரஷினை பயன்படுத்தி நன்றாக தேய்த்து விடுங்கள். 2 அல்லது 3 நிமிடங்கள் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள்.
அதன் பின், தண்ணீரை ஊற்றி கழுவி விடுங்கள்.
பாத்ரூமை இதை விட யாரும் ஈஸியா கிளீன் செய்ய முடியாது..
இவ்வாறு செய்வதன் மூலம், பாத்ரூம் டைல்ஸில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி டைல்ஸ் பளப்பளப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பாத்ரூம் டைல்ஸ் வலுக்காமலும் இருக்கும்.
வாரத்தில் ஒருமுறை, இப்படி கோலமாவினை வைத்து பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்வதன் மூலம் பாத்ரூம் டைல்ஸ் பளப்பளப்பாக இருப்பதுடன் வழுவழுப்பு தன்மை இல்லாமலும் இருக்கும்.
கிச்சன் எப்போதும் சுத்தமாக இருக்க இந்த குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |