எந்த கடனை முதலில் அடைக்க வேண்டும்…

Advertisement

Which debt should be paid off first?

இன்றைய கலாச்சார உலகில் பெரும்பாலான தேவைகள் கடன் மூலமே நிறைவேற்றப்படுகிறது. ஸ்மார்ட் போன் தொடங்கி நமது கனவு இல்லம் வரை கடன் மூலமே வாங்கும் காலம் வந்துவிட்டது. நமது முன்னோர் கடன் வாங்க அஞ்சினர். வரவுக்குள் செலவை முடித்தர்கள. அவர்களின் தேவையும் குறைவாக இருந்தது. அதிக உடல் உழைப்பு இருந்ததால் அவர்களுக்கு மசாலா அரைக்க, துணிதுவைக்க மெஷின் தேவைப்படவில்லை. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனம் தேவையில்லை, நடந்தோ மிதிவண்டியிலோ சென்றார்கள்.

இன்றைய கால கட்டம் அப்படியே கீழாக மாறிவிட்டது, மசாலா அரைக்க, இட்லி மாவு அரைக்க மெஷின், உணவுகளை பாதுகாக்க மெஷின், துணிதுவைக்க மெஷின் எப்படி நமது அனைத்து தேவைகளுக்கும் நமக்கு மெஷின் தேவைப்படுகிறது. பக்கத்தில் உள்ள கடைக்கு செல்ல கூட நமக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் தேவைப்படுகிறது. இப்படி அனைத்து தேவையையும் குறுகிய காலத்திற்குள்ளே பூர்த்திசெய்துக்கொள்ள நினைக்கும் பலருக்கு வந்தது தான் EMI. நீங்கள் உங்கள் வாழ்க்கை தேவைக்காக கடன் மேல் கடன் வாங்கி நிரந்தர கடனாளி ஆகிவிடுகிறீர்கள். யார் ஒருவர் தனது தேவையான ஸ்மார்ட் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார், வீடு போன்றவற்றை கடனில் வாங்குகிறாரோ, அவரின் வருமானத்தில் 85 சதவீதம் கடனை அடக்கவே போதுமானதாக இருக்கிறது. இது போக தினசரி செலவை சமாளிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இது போன்ற சில ஆடம்பர செலவுகள் உங்களை கடனுக்கும் சிக்கிக்கொள்ள செய்கிறது.

உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எந்தெந்தக் கடனை முதலில் நீங்கள் செலுத்த வேண்டும் என்பது பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை, எந்த கடனை அடைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

செல்வம் பெருக ஆடி 18 அன்று இந்த பொருட்களை மறக்காமல் பூஜை அறையில் வையுங்கள்.!

Which debt should be paid off first?

தனிநபர் கடன் 

Which debt should be paid personal

உங்கள் கடன்களில் நீங்கள் முதலில் செலுத்த வேண்டியது தனிநபர் கடன்களை தான். தனிநபர் கடன் உங்களின் வருமானத்தின் அடிப்படையிலும், உங்கள் முந்தைய கடன்களின் தகவலை கொண்டு வழங்கப்படும் பாதுகாப்பற்ற கடன் ஆகும்.

தனிநபர் கடனில், கடனின் வட்டி விகிதம் அதிகம். நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை தனிநபர் கடனுக்கு அதிகமாக இருக்கும்.

ஆகையால் தனிநபர் கடனுக்கு நீங்கள் அதிக முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

உற்பத்தி செய்யாத கடன் 

உங்கள் நிலங்கள் மீது, தங்கத்தின் மீது, வாகனத்தின் மீது நீங்கள் பெரும் கடனுக்கு எந்த வரிசலுகையும் கிடையாது. இந்த வகையான கடன்களில் வட்டி அதிகமாக இருக்கும், அதனால் இதனை அடைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

கல்விக் கடன் 

Which debt should be paid education loan

உங்களுடைய மற்ற கடன்களை அடைத்த பின்னர் உங்களது கல்வி கடனுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏன்னென்றால் கல்வி கடனுக்கு வரிச்சலுகை பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெரும் கல்விக்கடனுக்கு வட்டி செலுத்துபவர் கல்வி கடன் தொகைக்கு வரிச்சலுகை பெறலாம்.

 

கடன் அடைப்பதற்கான நல்ல நேரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

வீட்டுக்கடன் 

Which debt should be paid home loan

இன்று பெருபாலானவர்கள் வீட்டு கடன் பெற்றவராகவே உள்ளனர். வீட்டுக் கடனை அசல் தொகை மற்றும் அதன் வட்டி என்று இருபிரிவாக செலுத்தலாம். இந்த இரண்டு முறைகளிலும் கடன் பெற்றவர் வரிச்சலுகை பெறலாம். உங்களின் EMI தொகை, உங்கள் வீட்டின் வகை நீங்கள் உங்கள் கடனை செலுத்த தேர்தெடுத்த காலம் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.

ஒருவர் இரண்டு வீட்டுக்கடன் வைத்திருந்தால், அவரின் இரண்டாவது விட்டு கடனின் வட்டிக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இந்த வரி விலக்குக்கு எந்த வரம்புகளை கிடையாது. இதை கருத்தில் கொண்டு உங்கள் வீட்டுக் கடனை அனைத்து கடன்களையும் அடைத்த பின்னர் அடைப்பது சிறந்தது.

 

 

கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வையுங்கள்.!

மேல் கூறிய முன்னுரிமை கடன் சேவைகளை பொறுத்ததே, உங்கள் கடனுக்கு வழங்கும் வட்டியை விட அதிகமாக உங்கள் முதலீட்டில் நீங்கள் பெறலாம் அதனால் நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்து உங்களது முன்னுரிமை இருக்க வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement