கை வைக்காமலேயே பழைய வெள்ளை துணியை புதியது போல மாற்றுவதற்கும் வாசனையாக வைப்பதற்கும் இந்த ஒரு டிப்ஸ் போதும்..!

how to wash white clothes by hand in tamil

வெள்ளை துணி வெண்மையாக

வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் வெள்ளை நிற துணி மிகவும் பிடிக்கும். அப்படி பிடிக்கும் போது அந்த துணியில் எதாவது கறை படிந்தாலோ அல்லது துணி பழையது போல ஆகிவிட்டாலும் அதை துவைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இனி நீங்கள் துவைப்பதற்கு கஷ்ட பட வேண்டாம்.  நீங்கள் உபயோகித்த வெள்ளை சட்டை, வேட்டி, துண்டு இதுபோல இருக்கின்றன பழைய துணிகளை கை வைக்காமலேயே மீண்டும் புத்தம் புதிய துணி போல மாற்றுவதற்கான டிப்ஸ் மற்றும் பீரோவில் இருக்கும் துணிகள் வாசமாக வைப்பதற்கான டிப்ஸையும் பற்றி  இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு நீங்களும் பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒  உங்கள் துணியில் எந்த வித கறை படிந்தாலும் இனி                                                      கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ                                  பண்ணுங்கள் போதும்

பழைய வெள்ளை துணி:

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய வெள்ளை துணிகளை புதியது போல மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 தேவையான பொருட்கள்:

  • துணி பவுடர்- 1 ஸ்பூன் 
  • காஸ்டிக் சோடா- 1 ஸ்பூன் 
  • சூடு தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு அதில் கொதிக்கும் சூடான தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதன் பிறகு துணி பவுடர், காஸ்டிக் சோடா இந்த  இரண்டையும் வாளியில் இருக்கும் சூடான தண்ணீரில் போட்டு கை படாமல் ஒரு குச்சியால் நன்றாக கலந்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

காஸ்டிக் சோடா தண்ணீரில் பட்டதும் பொங்கி நுரை வந்து அடங்கிய பிறகு அதில் 2 அல்லது 3 பழைய வெள்ளை துணிகளை போட்டு அதே குச்சியால் துணிகளை நனைத்து 1 1/2 அல்லது 2 மணி நேரம் துணி அப்படியே நனைத்து இருக்க வேண்டும்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு அந்த துணிகளை எப்போதும் அலசுவது போல 3 முறை அலசி காய வைக்கவும். பிறகு நீங்களே பாருங்கள் பழைய வெள்ளை துணி புத்தம் புது துணி போல் மாறிவிடும். (குறிப்பு: காஸ்டிக் சோடாவில் கை பட்டால் கை வெந்து போகிவிடும். அதனால் உங்கள் கைகளை உபயோகப்படுத்த கூடாது)

துணிகள் வாசமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய பீரோவில் இருக்கும் துணிகள் எப்போதும் புதியது போல வாசனையாக இருப்பதற்கான டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  • துணி சோடா- 1/4 ஸ்பூன் 
  • கம்போர்ட்- 1 ஸ்பூன் 

செய்முறை:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்து உருண்டையாக பிடித்து உங்கள் வீட்டில் இருக்கும் நிழலில் காய வைத்துவிடுங்கள்.

ஸ்டேப்- 2

மறுநாள் அந்த உருண்டை காய்ந்த பிறகு ஒரு காட்டன் துணியில் அந்த உருண்டையை வைத்து முடிச்சு போட்டு விடுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டு பீரோ, அலமாரி, கபோர்டு இது போன்ற இடங்களில் வைத்து விடுங்கள். துணிகளில் எப்போதும் வாசம் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் மழை காலத்தில் பூசனம் பிடித்த வாடை வீசாது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil