இரண்டே நிமிடத்தில் அழுக்கு படிந்த வெள்ளை சட்டையை கறை இல்லாமல் பளிச்சென்று மாற்றலாம்..!

Advertisement

White Shirt Washing Tips in Tamil

அனைவருக்கும் நிறங்களை பொறுத்தவரை ஒவ்வொரு விருப்பமானது காணப்படும். அந்த வகையில் நிறைய நபர்களுக்கு வெள்ளை நிறமும், வெள்ளை நிறத்தில் உள்ள ஆடைகளையும் அணிவது என்பது அதிகமாக பிடிக்கும். அப்படி பார்த்தால் வெள்ளை நிற ஆடை அணிவது என்பது எல்லோருக்கும் பிடித்தாலும் கூட அதனை கறை படியாமல் பார்த்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் வெள்ளை சட்டையில் கறை படிந்தால் அதனை நீங்க செய்வது சிலரால் முடியாமலே இருக்கிறது. அதிலும் ஒரு சிலர் கடைகளில் கொடுத்து கூட வெள்ளை சட்டையை துவைத்து கொடுக்குமாறு கேட்பார்கள். இனி நீங்கள் இதுபோல கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய டிப்ஸ் பதிவில் வெள்ளை சட்டையை எப்படி இரண்டே நிமிடத்தில் சுத்தம் செய்வது என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெள்ளை சட்டையில் கரை நீக்குவது எப்படி..?

வெள்ளை சட்டை என்பது பெரும்பாலும் ஆண்கள் அணியக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த வெள்ளை சட்டையை வெளியில் செல்லும் போது அணிவதனால் கறைகள் படியும் வாய்ப்பு ஆனது அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு கறை படிந்துள்ள சட்டையை சுத்தம் செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பல் துலக்கும் பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
  • தண்ணீர்- 2 லிட்டர்
  • துணி துவைக்கும் பவுடர்- 1 ஸ்பூன்

 வெள்ளை சட்டையில் கரை நீக்குவது எப்படி

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் துணி துவைக்கும் பவுடரை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்பு அதே தண்ணீரில் 1/2 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த தண்ணீரை கலப்பதற்கு கையினை பயன்படுத்தக்கூடாது. ஆகையால் இதற்கு மாறாக வேறு எதையாவது பயன்படுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள தண்ணீரில் வெள்ளை சட்டையை நன்றாக ஊற வைய்யுங்கள். இந்த சட்டையை 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு பிறகு ஊறவைத்துள்ள சட்டையை வெளியே எடுத்து வழக்கம் போல் துவைத்து விடுங்கள்.

பின்பு நல்ல தண்ணீரில் அலசி காய வைய்யுங்கள். இந்த முறையில் சட்டையை சுத்தம் செய்தால் போதுமானது சட்டை பளிச்சென்று மாறிவிடும்.

மேலும் இந்த தண்ணீரில் குறைந்தபட்சம் 3 சட்டைகள் வரையும் ஊற வைக்கலாம்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement