White Shoes Cleaning Tips
அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். இந்த பதிவை படிக்க தொடங்குங்கள் நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும். பெரும்பாலும் அனைவரின் வீட்டிலேயும் இருக்க கூடிய பிரச்சனை தான். அது வேற எதுவும் இல்லை. வெள்ளை ஷூவை பற்றி தான் கூறிக் கொண்டிருக்கின்றோம். அனைவரின் வீட்டிலேயும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் இருப்பார்கள்.
இவ்வளவு ஏன் இந்த காலத்தில் பெரியவர்கள் கூட ஷூ அணிகிறார்கள். அப்படி இருக்கும் போது மற்ற நிறத்தில் இருக்கும் ஷூக்களில் அழுக்கு படிந்தால் அதை சுலபமாக நீக்கிவிடலாம். ஆனால் வெள்ளை நிற ஷூவில் அழுக்கு படிந்தால் அதை எப்படி நீக்குவது என்று புலம்புபவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
White Shoes Cleaning Tips in Tamil:
டிப்ஸ் -1
முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு பாத்திரம் கழுவும் லிக்விடை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு துணி அல்லது பல் துலக்கும் பிரஷை பயன்படுத்தி ஷூவில் எல்லா இடங்களிலும் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
பின் ஷூவை தண்ணீர் ஊற்றி கழுவி உலரவைக்க வேண்டும். இப்பொழுது உங்கள் ஷூக்கள் புதுசுப் போல மாறிவிடும்.
கேஸ் பர்னரை இப்படி கூட சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இது தெரியலையே நமக்கு..! |
டிப்ஸ் -2
ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் 3 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் அளவிற்கு வினிகர் மற்றும் 1 ஸ்பூன் அளவிற்கு சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த பேஸ்டை பல்துலக்கும் பிரஷை பயன்படுத்தி ஷூக்களை நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் இந்த 1 மணிநேரம் வரை அப்படியே வைக்க வேண்டும். பின் உங்கள் ஷூக்களை கழுவி கொள்ளலாம்.
இப்பொழுது பார்த்தால் உங்கள் வெள்ளை ஷூக்கள் புதுசு போல மாறிவிடும். நீங்களும் இதுபோல செய்து கறைபடிந்த ஷூக்களை புதுசுபோல மாற்றிக் கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |