ஆலப்புழா சுற்றுலா இடங்கள்
சுற்றுலா செய்வது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பயணம். இந்த சுற்றுலா பயணத்திற்கு நீங்கள் கட்டாயமாக வருடத்திற்கு ஒரு முறையாவது சென்றுடுவீர்கள். அப்படி நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்களில் ஆலப்புழாவும் ஒன்று. நீங்கள் ஆலப்புழாவிற்கு செல்லும் போது கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பதிவானது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.
Alappuzha Tourist Places in Tamil:
ஆலப்புழா போட் ஹவுஸ்:
ஆலப்புழாவில் உள்ள போட் ஹவுஸ் அனைவருடைய கண்களையும் கவர கூடிய வகையில் அழகாக இருக்கும். அதில் பல வகையான சின்ன சின்ன அறைகளுடன் கூடிய போட் ஹவுஸ் இடம் காணப்படுகின்றன. இந்த போட் ஹவுஸ் சுற்றுலா பயணிகளுக்கு பார்த்தவுடன் பிடிக்கும் ஒரு இடமாக இருக்கிறது.
Alappuzha Beach:
இரண்டாவதாக பார்க்கப்போகும் இடம் ஆலப்புழா கடற்கரை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இடமாக ஆலப்புழா கடற்கரை இருக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற ஒரு இடமாகவும் இருக்கிறது. ஆகையால் மறக்காமல் ஆலப்புழா கடற்கரைக்கு சென்று விட்டு வாருங்கள்.
ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள் |
கிருஷ்ணன் கோவில்:
ஆலப்புழாவில் புகழ்மிக்க கிருஷ்ணன் கோவில் ஒன்று இருக்கிறது. கிருஷ்ணன் கோவில் கி.பி 17– ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலின் தரை முழுவதும் செஸ் விளையாட்டில் இருக்கும் கட்டத்தினை போல அமைக்க பட்டிருக்கும்.
ஓணம் திருவிழாவின் போது கிருஷ்ணன் கோவில் ஏராளமான மக்கள் வந்து கலந்து கொள்கின்றனர். கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் அனைத்து மக்களும் வெறும் வயிற்றில் திரும்பி செல்ல கூடாது என்பதற்காக பாயாசம் வழங்கப்படுகிறது.
Pathiramanal Island Alappuzha in Tamil:
ஆலப்புழாவில் அடுத்து நாம் பார்க்க வேண்டிய இடம் பாதிரமணல் தீவு. இந்த தீவில் எண்ணற்ற பறவைகள் இருக்கின்றன. காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு பறவைகள் மாறி மாறி வந்து செல்கின்றன. இந்த இடத்திற்கு நீங்கள் போட்டில் மட்டும் தான் செல்ல முடியும். நீங்கள் போட்டில் செல்லும் போது இந்த இடத்தை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
கிருஷ்ணாபுரம் பேலஸ்:
அடுத்து நாம் பார்க்க போகும் இடம் கிருஷ்ணாபுரம் பேலஸ். இந்த பேலஸ் மார்த்தாண்ட வர்மா, அணிலால் மற்றும் திருநல் என்ற மூன்று மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கிருஷ்ணாபுரம் பேலஸில் 3 மீட்டர் வரை வரையப்பட்டுள்ள ஒரு படம் இருக்கிறது.
அதுபோல அங்கு ஒரு மியூசியம் அமைந்துள்ளது. அந்த மியூசியத்தில் மன்னர்களுடைய அனைத்து விதமான பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே நண்பர்களே நீங்கள் ஆலப்புழாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றால் மேல் சொல்லப்பட்டுள்ள இடங்களுக்கு மறக்காமல் சென்று மகிழ்ந்துவார்கள்.
இதையும் படியுங்கள்⇒ கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |