உலகின் மிகவும் அழகான 5 ஊர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Most Beautiful Villages in World

இன்றைய பதிவில் வாழ்ந்தா இப்படி ஒரு ஊரில்தான் வாழவேண்டும் என்ற அளவிற்கு உலகிலேயே மிகவும் அழகாக உள்ள 5 ஊர்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளது. அந்த நாடுகளின் உள்ளே பல்லாயிரக்கணக்கான ஊர்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வகையில் அழகாக உள்ளது.

அதில் மிகவும் ஆச்சரியப்படுத்தக்கூடிய மற்றும் மிகவும் அழகான இயற்கை சூழலுடன் அமைந்துள்ள 5 ஊர்களை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்தெந்த ஊர்கள் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

 வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய தோட்டங்கள்

Beautiful Village in the World in Tamil:

1. கீத்தோரன்:

Most Beautiful Villages in World

நாம் முதலாவதாக பார்க்க இருப்பது கீத்தோரன்(GIETHOORN) நெதர்லாந்து பற்றி தான். இது நெதர்லாந்தில் உள்ள வீர்ரிபென்-வீடன் வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. 

இந்த கிராமத்தில் சாலைகளே கிடையாது. கார், பஸ், ஆட்டோ எதுவுமே கிடையாது. இங்கு தெருக்கள் தண்ணீர் மூலமாகவே பிரிக்கப்படுகின்றன. ஏனென்றால் இந்த கிராமத்தை சுற்றிலும் கால்வாய்கள் மட்டுமே இருக்கும்.

அதனால் இந்த கிராமத்தில் பயணம் செய்வதற்கான ஒரே வழி படகு சவாரி மட்டுமே ஆகும். உலகம் முழுவதும் இருந்து தண்ணீரின் மீது காதல் கொண்டிருக்கும் பயணிகளை தன்வசம் ஈர்த்துக்கொள்கிறது இந்த ஊர்.

ஒரு சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது.

2. இன்டர்லேகன் சுவிட்சர்லாந்து:

Most beautiful village in india in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது இன்டர்லேகன் சுவிட்சர்லாந்து பற்றி தான். பொதுவாக சுவிட்சர்லாந்து என்றாலே மிகவும் அழகான இடம் என்று நமக்கு தெரியும். சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு ஏரிகளுக்கு நடுவில் உள்ள இந்த இன்டர்லேகன் என்ற பகுதி உள்ளது.

இதனை இயற்கையின் ஒரு அரண்மனை என்றும் கூறலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படும் இந்த இடத்தை பார்த்து மகிழ்வதற்கு என்றே இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

மேலும் இங்குள்ள ரயில் சேவையின் மூலம் நீங்கள் இந்த ஊரில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளையும் சுற்றி பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

3. Gujo Hachiman:

Famous village in japan in tamil

ஜப்பானில் உள்ள இந்த Gujo Hachiman என்ற இடத்தை பொதுவாக Water city என்று அழைப்பார்கள். ஏனென்றால் இந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருக்கும். இந்த உலகில் உள்ள மிகவும் அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்று.

1559-ல் தான் இந்த இடத்தை முதன் முதலாக வடிவமைத்துள்ளார்கள். இந்த இடம் மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படும். காலை நேரங்களில் இந்த இடத்தில் முற்றிலும் பனிமூட்டமாகவும் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த இடத்தை பார்த்து மகிழ்வதற்கு என்றே இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

4. மாவ்லின்னாங்:

Interesting villages in world in tamil

இந்தியாவில் மேகலவையாவில் உள்ள இந்த மாவ்லின்னாங் என்ற இந்த இடத்தை கடவுளின் சொந்த தோட்டம் என்று கூறுவார்கள்.

மேலும் இந்த மாவ்லின்னாங் கிராமம் 2003-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகவும் தூய்மையான கிராமம் என்ற கின்னஸ் பட்டத்தை பெற்றது. இதற்கு காரணம் இங்கு வசிக்கின்ற மக்களே.

நீங்கள் இங்கு சென்றால் உலகில் உள்ள அனைத்து இயற்கை அழகினையும் இங்கு பார்க்க முடியும். அதனால் இந்த இடத்தை பார்த்து மகிழ்வதற்கு என்றே இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா

5. Goreme:

Most unique villages in the world in tamil

இறுதியாக நாம் பார்க்க இருப்பது Goreme பற்றி தான். இது Turkey-ல் உள்ளது. இந்த இடம் முழுக்க முழுக்க பாறைகளால் சூழப்பட்ட மற்றும் பாறைகளால் அமைக்கப்பட்ட ஒரு இடமாகும்.

இந்த ஊரினுள் நீங்கள் சென்றாலே வெறும் பாறைகள் மற்றும் மிகவும் அருமையான இயற்கை காட்சிகளை மட்டுதான் காணமுடியும். இங்குள்ள உயரமான மலைகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பார்க்க மிகவும் அழகாக மற்றும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

அதனால் இந்த இடத்தை பார்த்து மகிழ்வதற்கு என்றே இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement