கவனம் சிதறினால் மரணம் நிச்சயம் 3825 அடி கொண்ட கொண்டரங்கி மலை | Kondarangi Malai
Kondarangi Keeranur Temple – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் நீங்கள் ஒரு சிவன் பக்தர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே திண்டுக்கல் மாவட்டத்தில் கீரனூர் என்ற ஊரில் கொண்டரங்கி என்று ஒரு மலை உள்ளது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட 3825 அடி ஆகும். இந்த மலையின் மேல் சிவபெருமான் சுயம்பு லிங்கம் வடிவில் அருள்பாலிக்கிறார். இம்மலையின் கீழ் கெட்டிமல்லீஸ்வரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் பக்தர்களுக்கு முக்தியும் மோட்சமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. மலை மேல் உள்ள சிவன் கோவில்களுக்கு செல்ல உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றால் தாராளமாக இந்த மலைக்கு நீங்கள் சென்று வரலாம். சரி வாங்க இந்த மலை குறைத்த தகவல்களை படித்தறியலாம்.
கொண்டரங்கி மலை – Kondarangi Keeranur Temple:
கொண்டராங்கி மலையின் மொத்த உயரம் 3825 அடி ஆகும். இந்த மலையின் உச்சிக்கு மேல் செல்வதற்கு சுமார் 90 நிமிடங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
அங்குள்ள கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் அந்த மலையின் பாறையைக் கொண்டே கட்டப்பட்டவை ஆகும்.
இந்த மலையை ஏறுவதற்கு ஏற்றதாக படிக்கட்டுகளும் வெட்டியுள்ளனர். இம்மலையின் வடிவம் பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சியளிக்கிறது. இதனால் திருவண்ணாமலை போல இங்கும் மலையே சிவலிங்கமாகக் கருதி வணங்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..!
இந்த மலையின் உச்சியில் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. இந்த லிங்கத்தை வணங்கினால் பக்தர்களுக்கு முக்தியும் மோட்சமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இம்மலையின் கீழ் கெட்டிமல்லீஸ்வரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கு மேல் மல்லிகார்ஜுன சுவாமியை வழிபடலாம். இம்மலை மேல் செதுக்கப்பட்ட சிற்பம் சுயம்பு லிங்கம்.
இம்மலையில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த தலம் எனவும் அர்ஜுனன் தவம் செய்த இடம் எனவும் இத்திருக்கோயிலைக் குறிப்பிடுகின்றனர்.
காகபஜேந்திரன் மற்றும் கணபதி என்ற இரண்டு துறவிகள் தங்களின் முன்வினை காரணமாக மீண்டும் காகங்களாகப் பிறந்தனர். அவர்கள் இம்மலையில் தங்கியிருந்து ஈசனை வழிபட்டுத் தவம் இருந்ததாகச் சொல்கிறது தலவரலாறு.
மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய விழாக்கள் இம்மலையில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்றவையும் இங்கு விசேஷம்.
இம்மலையில் வற்றாத நீரூற்று ஒன்று உள்ளது. இந்த ஊற்று நீரைத் தெளித்துக் கொண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்கின்றனர். இந்நீரே தீர்த்தமாக பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |