கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Krishnagiri District Tourist Places in Tamil 

தமிழ் நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிராக மாம்பழம் விளைவிக்கபடுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாம்பழம் உற்பத்தியில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கின்றது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு 3,00,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் இந்த மாவட்டம் சுற்றுலா செல்வதற்கும் மிக சிறந்த மாவட்டமாக உள்ளது.

அதனால் இன்றைய பதிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அடுத்த முறை நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ சுற்றுலா செல்ல திட்டமிடுமும்பொழுது கண்டிப்பாக இந்த பதிவில் கூறியுள்ள 5 சுற்றுலா ஸ்தலங்களுக்கும் சென்று சுற்றி பார்த்து மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்=> கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Krishnagiri Famous Places in Tamil:

1. K.R.P அணை:

Krishnagiri Famous Places in Tamil

நாம் முதலாவது பார்க்க இருப்பது K.R.P அணை பற்றி தான். பொதுவாக கிருஷ்ணகிரி என்றதுமே அனைவரின் மனதிலேயும் முதலாவதாக நினைவிற்கு வரும் சுற்றுலா ஸ்தலம் என்றால் அது இந்த K.R.P அணை தான். 

இந்த அணை கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை 1958-ஆம் ஆண்டு காமராசரினால் தென்பென்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு அருகில் மிகவும் இயற்கை எழிலுடன் ஒரு பூங்காவும் உள்ளது. அதனால் இந்த அணைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்களில் இந்த K.R.P அணையும் ஒன்று.

2. Parshwa Padmavathi Jain Temple:

Parshwa Padmavathi Jain Temple in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது Parshwa Padmavathi Jain Temple பற்றி தான். இந்த கோவில் உலகிலேயே அதிக உயரங்களில் உள்ள சிலைகளை கொண்டுள்ள சமண மத கோவிலாக திகழ்கிறது.

இந்த கோவில் கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய கொடி ஏற்ற விழாவிற்கு பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்களில் இந்த  Parshwa Padmavathi Jain Temple-ம் ஒன்று.

இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா

3. Thally Lake and Park:

Places to visit in krishnagiri in tamil

அடுத்து நாம் Thally Lake and Park பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த Thally Lake and Park கிருஷ்ணகிரியில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் ஓசூரில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த Thally மலைகளால் சூழப்பட்டு மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் உள்ளதால் இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

அதனால் இதனை லிட்டில் இங்கிலாந்து என்றும் கூறுவார்கள். இங்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்களில் இந்த  Parshwa Padmavathi Jain Temple-ம்  ஒன்று.

4. கிருஷ்ணகிரி கோட்டை:

Tourist places near hosur in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது கிருஷ்ணகிரி கோட்டை பற்றி தான். இது கிருஷ்ணகிரில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். மிகவும் பழமை வாய்ந்த  இந்த கோட்டை வலிமையான சுவர்களுடன் மிகவும் கம்பிரமாக காணப்படுகிறது.

அதனால் இந்த கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு என்றே ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்களில் இந்த  கோட்டையும் ஒன்று.

இதையும் படியுங்கள்=> உலகின் மிகவும் அழகான 5 ஊர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

5. Kelavarapalli அணை: 

Krishnagiri Famous in Tamil

நாம் இறுதியாக பார்க்க இருப்பது Kelavarapalli அணை பற்றி தான். இந்த அணை கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ தொலைவிலும் ஓசூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த அணை 1995-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த அணை மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. அதனால் இந்த அணையை சுற்றி பார்ப்பதற்கு என்றே ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்களில் இந்த Kelavarapalli அணையும் ஒன்று.

இதையும் படியுங்கள்=> தர்மபுரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளதா

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement