மதுரையில் பார்க்க வேண்டிய இடங்கள்
மதுரை என்று சொன்னவுடன் நியாபகம் வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரை மல்லி தான். அதுப்போல மதுரைக்கு சுற்றுலா செல்ல போகிறோம் என்றால் உடனே அனைவரும் யோசிப்பது மதுரை மீனாட்சியின் அம்மன் கோவில் பற்றி தான். ஆனால் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமில்லாமல் நமது கண்ணை கவரும் அழகான இடங்களும் இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தவிர வேறு என்னென்ன இடங்கள் சுற்றி பார்க்கலாம் என்று தெரிந்துக்கொண்டு அடுத்த முறை மதுரைக்கு செல்லும் போது மறக்காமல் சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்
Madurai Tourist Places in Tamil:
மதுரையை வீரத்திற்கு பெயர் போன மதுரை என்றும் சொல்வார்கள். இந்தியாவின் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்றாக இருக்கிறது. இந்த மதுரை கோவில்களின் நகரம் என்றும் சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த மதுரை வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவில்:
வைகை ஆற்றின் தென் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த கோவில் மதுரையின் அடையாளமாகவும் இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரஸ்வரரின் மனைவியான மீனாட்சி அம்மனை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் 985 தூண்களும்,14 கோபுரங்களும், 1 தங்க தாமரையும் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவில் கொற்றங்கரை குளமும் அமைந்துள்ளது.
புது மண்டபம் மதுரை:
நீங்கள் மதுரையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் மதுரையில் உள்ள புது மண்டபத்திற்கு செல்லுங்கள். அந்த இடத்தில் உங்களுடைய கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகாக உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும்.
கூடல் அழகர் கோவில்:
மூன்றாவதாக பார்க்கப்போகும் இடம் கூடல் அழகர் கோவில். இந்த கோவில் தென்னிந்தியாவில் உள்ள பழமையான கோவிலாக இருக்கிறது. இத்தகைய கூடல் அழகர் கோவிலானது வைணவ திருக்கோவிலகும்.
இங்கு மகாவிஷ்னுவின் அமர்ந்தல், நின்றல் மற்றும் சாய்தல் ஆகிய மூன்று காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. இந்த கூடல் அழகர் கோவிலில் 9 நவகிரங்களும் இருக்கிறது. நீங்கள் மதுரைக்கு சென்றால் மறக்காமல் கூடல் அழகர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
அழகர் கோவில்:
அழகர் கோவில் மதுரையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவானது சித்திரை மாதம் மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது.
நீங்கள் மதுரைக்கு சென்றால் கண்டிப்பாக அழகர் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு தடவை அங்கு நீங்கள் சென்றால் போதும் அங்குள்ள சிற்பங்களும், இயற்கை காட்சிகளும் உங்களை அந்த இடத்தை விட்டு போக விடாது.
பழமுதிர்ச்சோலை:
அடுத்து நாம் பார்க்கப்போகும் இடம் அழகர் கோவிலுக்கு அருகில் 1 1/2 கிலோ மீட்டர் தொலைவில் சோழமலை உச்சியில் அமைந்துள்ள பழமுதிர்சோலை பற்றி தான். இந்த கோவிலிக்கு அருகில் நூபுர கங்கை என்ற புகழ்பெற்ற நீரூற்று ஒன்று அமைந்துள்ளது.
பழமுதிர்சோலையில் மரம் மற்றும் பளிங்கு கல்லால் ஆன முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இந்த கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 6-வது வீடாகும்.
அதிசயம் தீம் பார்க்:
மதுரையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் 70 ஏக்கர் பரப்பளவில் அதிசயம் தீம் பார்க் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 40 விதமான விளையாட்டு அமைப்புகளும் மற்றும் 20 விதமான நீர் சவாரிகள் அமைப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.
இந்த தீம் பார்க் குயின் ஆஃப் இந்தியன் தீம் பார்க் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீங்கள் ஒரு முறை சென்றால் போதும் உங்களுக்கு வெளியே வர விருப்பமே இருக்காது. அந்த அளவிற்கு அழகாக இருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |