ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்

Advertisement

ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்

ஹாய் நண்பர்களே..! நீங்கள் பொதுநலம். காம் பதிவில் ஒவ்வொரு வகையான Tourist இடங்களின் பதிவுகளை பற்றி படித்து தெரிந்துகொண்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் ஊட்டியில் கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். ஊட்டி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஊட்டிக்கு போகும் போது நீங்கள் எந்த இடங்களையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்வோம்.

Ooty Tourist Places in Tamil:

ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடையில் ஊட்டி இடம்பெற்று இருக்கிறது. இந்த ஊட்டி கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,500 அடி உயரத்திலிருந்து காணப்படுகிறது.

பொட்டானிக்கல் கார்டன்:

ஊட்டியில் முதலில் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் பொட்டானிக்கல் கார்டன். இந்த கார்டனில் பலவகையான மரங்கள், பூக்கள், பேப்பர் பூக்கள் மற்றும் குரங்குகள் ஏற முடியாத மரம் போன்றவற்றை கண்களுக்கு காட்சி அளிக்கும் வகையில் இடம்பெற்று இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் இந்த கார்டனில் கண்காட்சி நடைபெறுகிறது.

ரோஸ் கார்டன் ஊட்டி:

ரோஸ் கார்டன் ஊட்டி

ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்ற இடத்தில் ரோஸ் கார்டன் இடம்பெற்றுள்ளது. இந்த ரோஸ் கார்டன் 4 ஏக்கர் பரப்பளவில் 100-வது மலர் கண்காட்சியின் நினைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கார்டனில் 2,240 வகையான பூக்கள் காணப்படுகிறது. அந்த இடத்தில் இருக்கும் நிலா மாடம் ரோஸ் கார்டனின்  முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

ஊட்டி லேக் பார்க்:

 

அடுத்ததாக லேக் பார்க் ஊட்டி இரயில்வே நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இந்த லேக் பார்க் அருகில் ஒரு ஏரியும் காணப்படுகிறது. அந்த ஏரியை சுற்றி நிறைய மரங்கள் மற்றும் சிறுவர், சிறுமிக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு மைதானமாகவும் காணப்படுகிறது.

பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்..!

போட் ஹவுஸ்:

ஊட்டியில் முக்கியமான இடமாக இருப்பது போட் ஹவுஸ். இந்த போட் ஹவுஸில் பல வகையான போட்கள் காணப்படுகிறது. அத்தகைய போட்டில் பயணம் போது இயற்கையின் அழகை ரசிக்க முடியும்.

நீலகிரி மலை ரயில்:

நீலகிரி மலை ரயில்

ஊட்டியில் உள்ள நீலகிரி மலை ரயில் பயணம் அனைவரும் செல்ல வேண்டிய ஒரு முக்கியமான இடம். யூனோஸ்காவில் உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது இந்த நீலகிரி மலை ரயில்.

ஊட்டி தொட்டபெட்டா:

thottapetta

ஊட்டி என்றால் அனைவருக்கும் நியாபகம் வரும் இடம் தொட்டபெட்டா தான். இது ஊட்டியில் உள்ள மிகவும் உயரமான மலை. அதற்கு அருகில் டெலஸ்கோப் ஹவுஸ் உள்ளது. அங்கு சென்று மலையின் அழகை  பார்ப்பது கண்களுக்கு அழகாக இருக்கும்.

ஊட்டி குன்னூர்:

குன்னூர்

ஊட்டியில் இருந்து 20 கிலோ மீட்டருக்கு அருகில் குன்னுர் அமைந்திருக்கிறது. இந்த குன்னுரில் இடம் பெற்றுள்ள Sims Park கண்ணை கவரும் வகையில் அவ்வளவு அழகாக இருக்கும்.

டால்பின் மூக்கு குன்னூர்:

டால்பின் மூக்கு

கடைசியாக பார்க்க போகும் இடம் டால்பின் மூக்கு. இந்த டால்பின் மூக்கு கடல் மட்டத்திலிருந்து 5,075 அடி உயரத்தில் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement