பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்..!

Advertisement

பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் – Pondicherry Tourist Places in Tamil

Pondicherry Tourist Places in Tamil – வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் சுற்றுலா சார்ந்த பதிவை தான் பார்க்க உள்ளோம். அந்த வகையில் நாம் இப்பொழுது பார்க்க இருப்பது பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களை தான்.. நீங்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இந்த பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களை பற்றி இப்பொழுது பார்த்துவிடுவோம்.

Pondicherry Tourist Places Images with Names in Tamil

பாரடைஸ் பீச் (Paradise Beach Pondicherry):

Paradise Beach

Pondicherry Tourist Places in Tamil – படகு சவாரி செல்ல விரும்புபவர்கள் இந்த பாரடைஸ் பீச்சை தேர்வு செய்யலாம். இந்த பாரடைஸ் பீச் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். நன்கு பராமரிக்கப்படும் பீச்சாக இந்த பாரடைஸ் பீச் உள்ளது. இங்கேயும் புகை படங்கள் எடுப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

பிரஞ்சு காலனி (French Colony Pondicherry):

French Colony

இந்த பிரஞ்சு காலனி பாண்டிச்சேரியில் தான் உள்ளது.. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த காலனி பிரஞ்சுக்காரர்களால் பட்டப்பட்டதாம். இந்த காலனியில் நீங்கள் தங்கி இருக்கும்போது வேறொரு நாட்டில் இருப்பது போல் உணருவீர்களாலும். அவ்வளவு அருமையாக இருக்குமாம். இங்கு திருமணத்திற்கு முன் தப்பத்தியர்கள் போட்டோ சூட் எடுப்பதற்கு மிகவும் அழகான இடங்கள் எல்லாம் இருக்கிறதாம். மேலும் இந்த காலணியிலேயே ஹோட்டல்ஸ் இருக்கிறதாம். இந்த பிரஞ்சு காலனியில் ஒரு நாள் ரூம் எடுத்து தங்குவதற்கு வாடகை 5000 முதல் 8000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறதாம். இது தவிர்த்து ரூம் எடுக்காமல் வெறும் போட்டோசூட் எடுக்க வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு 400 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறதாம். உங்களுக்கு இந்த இடத்திற்கு போக விருப்பம் இருக்கிறது என்றால் கண்டிப்பாக பாண்டிச்சேரி செல்லும்போது சென்று வாருங்கள்.

ராக் பீச் (Rock Beach Pondicherry)

கடல்காரிகளுக்கு செல்ல விரும்புபவரக்ள் இந்த ராக் பீச்சுக்கு சென்று வரலாம். ஒரு நிம்மதியான உணர்வு உங்களுக்கு கிடைக்கும். இந்த பீச்சியை ஒட்டி சுற்றி பார்க்கும் இடங்கள் அதிகமாக உள்ளது. அதேபோல் உணவகங்களும் நிறைய உள்ளது. ஆக உங்கள் சுற்றுலாவை இனிமையானதாக மற்றும் இடமாக இந்த இடம் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஈடன்  பீச் (Eden Beach Pondicherry):

பாண்டிச்சேரியில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத மிகவும் தனித்துவமான கடற்கரைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் இந்த ஈடன் பீச். இந்த ஈடன் பீச் பாண்டிச்சேரிக்கு சுற்றலா வரும் ஒரு சிலருக்கு தான் இந்த ஈடன் பீச் பற்றி தெரியும். நீங்கள் கடற்கரையை தனிமையாக அல்லது உங்கள் துணையுடன் ரசிக விரும்பும் நபரா அப்படியென்றால் நீங்கள் இந்த ஈடன் பீச்சை தேர்வு செய்யலாம். மேலும் இங்கு போடோ சூட் எடுப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கும்.

மாட்ரிமந்திர் (Matrimandir Auroville Pondicherry):

நீங்கள் பாண்டிச்சேரியில் சிறப்பு வாய்ந்த சுற்றலா இடங்களை ஆன்லைனில் தேடும் பொழுது கண்டிப்பாக இந்த கோல்டன் குளோப்பும் கண்டிப்பாக கட்டப்படும். இந்த கோல்டன் குளோப் மாட்ரிமந்திர் என்று அழைக்கப்டுகிறதாம். பாண்டிச்சேரியில் அதிக மக்கள் பார்வையிடப்படும் இடமாக இதுவும் இருக்கிறது. உங்களுக்கு இந்த படத்தை பார்க்க விருப்பம் இருந்தால் தாராளமாக பாண்டிசேரிக்கும் செல்லும்போது பார்த்து வாருங்கள்.

அரிக்கமேடு (Arikamedu Pondicherry)

பாண்டிச்சேரியில் கடற்கரைகளை விட்டு சற்று விலகி, பாண்டிச்சேரியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அரிக்கமேடு உள்ள. இந்த அரிக்கமேடு பாண்டிய காலத்தில் ரோமானிய வர்த்தக மையமாக இருந்தது. ஆக இது பழமைவிந்த இடம் என்று சொல்லலாம். இங்கு புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

தேவாலயங்கள் – Pondicherry Churches:

பாண்டிச்சேரியில் பலவகையான தேவலையங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இயேசுவின் புனித இதயத்தின் பசலிக்கா. இந்த தேவாலயம் வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பிரஞ்சு வடிவமைப்பில் கண்களை கவரும் அளவிற்கு அழகாக இருக்கும். இந்தியவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கிறிஸ்தவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து, இந்த அழகை கண்டுகளிக்கின்றனர். உயரமான கூரைகள் மற்றும் செழிப்பான கண்ணாடி ஓவியங்கள் மிகவும் இனிமையான சூழலை ஏற்படுத்துகிறது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement